தமிழ்நாடு சிறைத்துறையானது ஜெயிலர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு சிறைத்துறை காலிப் பணியிடங்கள்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி ஜெயிலர் பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Jailor (Men) – 6 பணியிடங்கள்
Jailor (Special Prison for Women) – 2 பணியிடங்கள்


ஜெயிலர் கல்வி தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அமேசான், பிளிப்கார்ட்: செப்டம்பர் 23 முதல் பம்பர் தள்ளுபடிகளுடன் பண்டிகைகால விற்பனை தொடக்கம்


Master’s degree in Criminology and Criminal Justice Administration or a Master’s degree in Social Work படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறைத்துறை வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஜெயிலர் ஊதிய விவரம்:


Jailor பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,900 முதல் ரூ.1,35,100வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்


தமிழ்நாடு சிறைத்துறை விண்ணப்ப கட்டணம்:


Registration Fee – ரூ.150
Examination Fee – ரூ.200


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அக்டோபர் 13ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ