மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் ஒரே ஒரு இடம் மட்டும்தான் காலியாக இருக்கிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 16, 2022, 01:06 PM IST
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
  • செப்டம்பர் 21ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
  • ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வேலை என்பது முக்கியமானதாகும். ஒருவரின் வேலையை வைத்துதான் அவர் இந்த சமூகத்தில் அளவிடப்படுகிறார். இதனால் பலரும் நிலையான ஒரு வேலைக்காக முயல்வதும், காத்திருப்பதும் அதிகம். தற்போது அப்படி ஒரு நிலையான வேலைக்கென்ற வாய்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow (JRF)) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி 21 செப்டம்பர் 2022 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow (JRF) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

JRF பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | LPG Gas Cylinder: மிஸ்டு கால் கொடுத்தால் போதும்: வீட்டிலிருந்தே புதி கேஸ் இணைப்பை பெறலாம்

சம்பள விவரம்:

ICMR விதிமுறைகளின்படி (NET/GATE தேர்வர்களுக்கு மாதம் ரூ. 31,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் சுருக்கமாக பட்டியலிடப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் விரிவான பயோடேட்டா மற்றும் புகைப்படத்துடன் (3 பிரதிகள்) சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய அம்சம்: மக்கள் ஹேப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News