ஜப்பானில் திறமையான பணியாளர்களை நியமிக்க, ஜப்பான் விரும்பும் முதல் 10 நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்தில் இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் உள்ள ஜப்பானின் தூதர் குனினோரி மாட்சுடா, தனது நாடு அதிக திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


முன்னதாக கடந்த வெள்ளி அன்று தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுக்காக அவர் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய தூதர், ஜப்பான் திறமையான பணியாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதல் 10 நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது. தற்போது ஜப்பானில் பணியாற்றி வரும் பாகிஸ்தான் தொழிலாளர்கள் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.


மேலும் பாகிஸ்தான் தொழிலாளர்களுக்கு ஜப்பானின் வேலை விசாக்கள் வழங்கப்படும் என்று கூறிய குனினோரி, முன்நிபந்தனையாக அவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜப்பானில் ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக செலவழிக்கும் தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களை ஜப்பானுக்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


2020 டோக்கியோ ஒலிம்பிக் குறித்து மனம் திறந்த தூதர், விளையாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறினார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.