இணையத்தை கலக்கும் ஜெனிபர் லோபஸின் ‘புதுவித பேண்ட்’ -SeePic!
உலக மக்களின் கவனத்தை ஈர்த்த ஜெனிபர் லோபஸின் புதுவித ஜீன்ஸ் பேண்ட் பூட்ஸ்!!
உலக மக்களின் கவனத்தை ஈர்த்த ஜெனிபர் லோபஸின் புதுவித ஜீன்ஸ் பேண்ட் பூட்ஸ்!!
தங்களுடைய ஆடையினை பார்த்து பார்த்து அணிவது அவர்களது பேரார்வத்தினை நம்மால் பார்க்க முடிகிறது...
இக்காலக்கட்டத்தில் மங்கையரின் ஆடைத் தேர்வு, தாங்கள் விரும்பும் நடிகையின் ஆடையினை போல் இருக்க வேண்டும் என என்னுகின்றனர். காரணம் அவர்கள் தானே ஆடைகளில் புதுவித கலாச்சாரத்தினை கொண்டு வருகின்றனர். இதற்கு மாறாய் பலர் தாங்களாக ஓர் வடிவமைப்பினையும் உலகிற்கு அறிமுகம் செய்கின்றனர்.
அந்த வகையில் நடனம், பாடகி, நடிகை மற்றும் மாடல் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ஜெனிபர் லோபஸின் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் 2019 ஆம் ஆண்டின் புதுவித ஆடை சேகரிப்பில் புதுவித ஜீன்ஸ் பேண்டை அறிமுகபடுத்தியுள்ளார். அந்த உடையை அவர் அணிந்து வந்த பொது அனைவரும் அவரை வியந்து பார்த்துள்ளனர். அவர், தனது உடம்பில் ஒரு வெள்ளை நிறத்தில் மேல் சட்டையை அணிந்துள்ளார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஆனால், அவர் அணிந்திருந்த பேண்ட் மட்டும்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பேண்ட் என்ற ஒரு ஆடையை நாம் பொதுவாக இடுப்பில் தான் அணிவோம். ஆனால் இவர் கொஞ்சம் வித்தியாசமாக தொடைப்பகுதிக்கு கீழ் முட்டிக்கால் பகுதியில் அணிந்துள்ளார். அதில், இரண்டு கால் பகுதிக்கும் பெல்ட் போட்டது போன்ற மாடலையும் வடிவமைத்துள்ளனர். அதில் பக்கெட்டும் வைத்துள்ளனர். இது, நாம் இருகால்களிலும் தனித்தனியாக சாக்ஸ் போடுவதை போன்று அணிந்து அதில் பெல்ட்டும் இட்டுள்ளார்.
இன்னும் சிலர் இந்த உடையை கேலி செய்யும் விதத்தில் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளனர்.