Jio வழங்கும் ₹3,499 திட்டம்; அப்படி என்ன தான் இருக்கு; விபரம் உள்ளே..!!
ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய நீண்டகாலத்திற்கான, ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் ஒரு புதிய ₹3,499 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கான பல ஜியோ திட்டங்கள் அமலில் உள்ள நிலையில், கூடுதலாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
ஜியோவின் ₹3,499 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் திட்டம்
நீண்ட காலத்திற்கான புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்களுக்கு ஒரு ஆண்டு காலம் முழுவதும் தினமும் 3GB அளவில் 4G தரவு கிடைக்கும். இது ஒரு ஆண்டு முழுவதும் 1,095 GB வரை தரவு பயன்படுத்தலாம். இந்த அலவை தாண்டினாலும், பயனர்கள் 64Kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவை ஆகியவையும் இதில் அடங்கும். ரூ .3,499 திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
ALSO READ | Reliance AGM 2021 Highlights: Jio - Google கூட்டணியில் மலிவு விலை ஸ்மார்ட்போன்
இந்த நன்மைகளைத் தவிர, JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட Jio செயலிகளை இலவசமாக பயன்படுத்தலாம். ₹3,499 ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது ஜியோ தளம் மற்றும் செயலியில் கிடைக்கிறது.
ஜியோ ஏற்கனவே ரூ .2,399 மற்றும் ரூ .2,599 என்ற கட்டணத்தில் வருடத்திற்கான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இரண்டும் ஒரு நாளைக்கு 2 GB தரவு, aன்லிமிடெட் கால்கள் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மேற்கூறிய ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். ஆனால், இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்னவென்றால், ரூ .2,599 திட்டத்தில் கூடுதலாக 10 ஜிபி தரவு மற்றும் Disney+ Hotstar VIP (ரூ.399 மதிப்பிலானது) இலவச சந்தா ஆகியவை அடங்கும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ 2,397 திட்டமும் உள்ளது. இது மொத்தம் 365 ஜிபி தரவு, அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் பல ஜியோ செயலிகளை இலவசமாக பய்ன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
சமீபத்திய அறிவிக்கப்பட்ட ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோ சமீபத்தில் புதிய ப்ரீ பளான்களை அறிவித்தது. இதில் தினசரி தரவு பயன்பாட்டில் எந்த வரம்பும் இல்லை. ஐந்து திட்டங்கள் உள்ளன: ரூ .127 திட்டம், ரூ .247 திட்டம், ரூ .447 திட்டம், ரூ. 597 திட்டம், ரூ .2,397 திட்டம்.
அனைத்து திட்டங்களும் ஜியோ (Jio) வலைத்தளத்திலும், MyJio பயன்பாட்டிலும் கிடைக்கின்றன.
ALSO READ | Microsoft Windows 11: அசத்தலான தோற்றம்; அசத்தலான அம்சங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR