Microsoft Windows 11: அசத்தலான தோற்றம்; அசத்தலான அம்சங்கள்

மைக்ரோசாப்ட் முற்றிலும் புதிய வடிவமைப்பிலான் விண்டோஸ் 11 என்னும் புதிய தலைமுறை ஆப்ரேடிங் சிஸ்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2021, 11:51 AM IST
  • விண்டோஸ் 11 ஆப்ரேடிங் சிஸ்டத்தில் புதிய தீம்கள் மற்றும் புதிய கிராபிக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இது தவிர, ஸ்டார்ட் மெனு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.
  • அப்டேட் செய்யும் போது, ​​ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கிராபிக்ஸ் காண்பீர்கள்
Microsoft Windows 11: அசத்தலான தோற்றம்;  அசத்தலான அம்சங்கள்  title=

Microsoft Windows 11:  மைக்ரோசாப்ட் முற்றிலும் புதிய வடிவமைப்பிலான் விண்டோஸ் 11 என்னும் புதிய தலைமுறை ஆப்ரேடிங் சிஸ்டத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது. பல அற்புதமான அம்சங்களையும் கொண்டுள்ள விண்டோஸ் 11 ஆப்ரேடிங் சிஸ்டத்தில் புதிய தீம்கள் மற்றும் புதிய கிராபிக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, இந்த முறை  ஸ்டார்ட் மெனு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

Windows 11 சிறப்பு அம்சங்கள் 

-விண்டோஸ் 11 (Wondows 11) ஒரு புதிய தோற்றத்தை கொண்டுள்ளது, இதில் பல கவர்ச்சிகரமான மற்றும் மேம்பட்ட தீம்கள் காணப்படுகின்றன. அப்டேட் செய்யும் போது, ​​ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கிராபிக்ஸ் தோன்றுவதை காண்பீர்கள்.

-விண்டோஸ் 11-ல் உள்ள டாஸ்க் பார் இடம் மாறியுள்ளது.  இதில், ஐகான்கள் கணிணியின் மைய பகுதியில் காணப்படும். இது மட்டுமல்லாமல், அதன் ஸ்டார்ட்  மெனுவும் நிறைய மாறிவிட்டது.

-  இதில் சிறப்பு என்னவென்றால், ஒரு திரையில் பல விண்டாக்களில் வேலை செய்ய முடியும். இது ஸ்னாப் லேஅவுட் (Sanp Layput) என்று அழைக்கப்படுகிறது. மல்டி டாஸ்க் பணியில் உள்ளவர்களுக்கு இது  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ | Windows 11: விண்டோஸ் 10, 8.1 பயனர்களுக்கு இலவசமாக கிடைக்குமா.. உண்மை நிலை என்ன 

-  உங்கள் லேப்டாப் அல்லது கணினி தொடுதிரை அதாவது டச் ஸ்க்ரீன்  என்றால், நீங்கள் கீ போர்ட் இல்லாமலேயே வேலை செய்யலாம். இதில் உள்ள, ஜெஸ்சர்  மற்றும் ஸ்ட்ரைக் அம்சங்கள் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

-  மேலும் விண்டோஸ் 11 ஸ்டோரில்  அனைத்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் தொகுப்பைப் பெறுவீர்கள்

-  இதில் நீங்கள் திரைப்படங்கள் அல்லது தொடர்களை வாங்கலாம். 

-  கேமிங்கை விரும்பும் மக்களுக்கு இந்த விண்டோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கேமிங்கிற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. கேமிங்கிற்கான சிறந்த அபரேடிங் சிஸ்டமாக  இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

-  இந்த விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தில் செயலிகளை பதிவிறக்கி நிறுவக்கூடிய அமேசான் ஆப் ஸ்டோரைக் காண்பீர்கள். எல்லா ஆண்ட்ராய்டு செயலிகளையும் இதில் நிறுவலாம், இருப்பினும் இதற்கு சில வரம்புகள் இருக்கும்.

-  இந்த விண்டோவில், தட்டச்சு செய்வதற்கான குரல் தட்டச்சு (Voice Typing) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் நீங்கள் மிக வேகமாக தட்டச்சு செய்ய முடியும். இது சிறந்த டச் கீபோர்ட் கொண்டது. இது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்

ALSO READ | Microsoft News: 2025ம் ஆண்டுக்குள் Windows 10 மூடப்படுவதன் பின்னணி தெரியுமா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News