இந்த புதிய 2023ம் ஆண்டில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களுக்கு அதாவது ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.  இந்த ரீசார்ஜ் திட்டங்களை நாம் பயன்படுத்தி கொள்வதால் ஒரு வருட காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அடிக்கடி நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கவலையில்லை.  இந்த திட்டங்கள் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா பலன்கள் மற்றும் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.  ரிலையன்ஸ் ஜியோ , ஏர்டெல் மற்றும் வி (வோடாபோன் ஐடியா) போன்ற நெட்வொர்க்குகள் 365 அல்லது 336 நாட்கள் செல்லுபடியாகும் வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள்:


ரூ.2545 திட்டம்: தினசரி  1.5ஜிபி டேட்டாவுடன் மொத்தமாக 504 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் இந்த திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.  இதில் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற பயன்பாடுகளுக்கான சந்தாக்களையும் வழங்குகிறது.


மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு மொபைல் விலையில் ஐபோன்! பிளிப்கார்டில் ரூ.32000 தள்ளுபடி


ரூ .2879 திட்டம்: தினசரி 2ஜிபி டேட்டாவுடன் மொத்தமாக 730ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் உங்களுக்கு அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் நன்மைகள் கிடைக்கும்.


ரூ 2999 திட்டம்: தினசரி 2.5ஜிபி டேட்டாவுடம் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் +23 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப் நன்மைகள் கிடைக்கும்.


ஏர்டெல் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள்:


ரூ.3359 திட்டம்: தினசரி 2.5ஜிபி டேட்டாவுடன் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான 1 வருட சந்தாவையும் வழங்குகிறது.  இதனுடன் கூடுதலாக அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா, பாஸ்டேக்-ல் ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் மற்றும் இலவச விங்க் மியூசிக் கிடைக்கிறது.


ரூ.2999 திட்டம்: 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் 2ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  கூடுதலாக இதுஅப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா, பாஸ்டேக்-ல் ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் மற்றும் இலவச விங்க் மியூசிக் ஆகியவற்றை வழங்குகிறது.


ரூ.1799 திட்டம்:  24ஜிபி மொத்த டேட்டா, 365 நாட்களுக்கு 3600 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. 


வோடபோன் ஐடியா வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள்:


ரூ.3099 திட்டம்: தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பலன்களை வழங்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.  நள்ளிரவில் இருந்து அன்லிமிடெட் டேட்டா பலன்கள் பயனர்களுக்கு கிடைக்கும்.  கூடுதலாக வி மூவிஸ், டிவி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கு 1 வருட இலவச சந்தா மற்றும் கூடுதல் 75 ஜிபி டேட்டாவை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது.


ரூ.2899 திட்டம்: தினசரி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  கூடுதலாக பிங்க் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், வி மூவிஸ், டிவி மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன்றவற்றை வழங்குகிறது.


மேலும் படிக்க | ஜியோ vs ஏர்டெல் vs Vi; ஒரு மாத வேலிடிட்டி கொண்ட பெஸ்ட் பிளான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ