ஆண்ட்ராய்டு மொபைல் விலையில் ஐபோன்! பிளிப்கார்டில் ரூ.32000 தள்ளுபடி

ஐபோன் மொபைலுக்கு இதுவரை இல்லாத தள்ளுபடி பிளிப்கார்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 32 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆண்ட்ராய்டு மொபைல் விலையில் ஐபோன் வாங்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 3, 2023, 07:36 PM IST
  • புத்தாண்டு பிளிப்கார்ட் ஆஃபர்
  • ஐபோன் 14-க்கு இதுவரை இல்லாத தள்ளுபடி
  • ஆண்ட்ராய்டு போன் விலையில் ஐபோன்
ஆண்ட்ராய்டு மொபைல் விலையில் ஐபோன்! பிளிப்கார்டில் ரூ.32000 தள்ளுபடி title=

புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்திருந்தாலும், பிளிப்கார்டில் ஐபோனுக்கான ஆஃபர் இன்னும் முடியவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு ஐபோன் 14 பிளாக்ஷீப் மொபைலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 பிளாக்ஷீப் மொபைல் அண்மையில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பம்பர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள இந்த மொபைலின் முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.  

Apple iPhone 14 பம்பர் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 14 வரிசையின் அடிப்படை மாடலாக உள்ளது. இது முதன்மை ஐபோன் மாடல்களைக் காட்டிலும் விலையில் மிகவும் மலிவானது. ஆப்பிள் ஐபோன் 14 ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் நிலையில், ஆப்பிள் ஐபோன் 14க்கு பிளிப்கார்ட் பெரும் தள்ளுபடியை வழங்கியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.32,901 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.46,990-க்கு மொபைலை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

மேலும் படிக்க | ரூ.8000-க்கும் குறைவான விலையில் புதிய சாம்சங்க் மொபைல்!

flipkart பம்பர் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 14 பேஸிக் மாடல் 128ஜிபி சேமிப்பகத்துக்கு தற்போது ரூ.5910 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த தள்ளுபடி பொருந்தும். HDFC வங்கியின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கியின் EMI பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக ரூ.4,000 உடனடி தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,990 ஆக குறையும்.

iphone 14 எக்ஸ்சேஞ்ச் சலுகை

இது தவிர, பிளிப்கார்ட் தளமானது உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.23,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அதாவது அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், நீங்கள் ஆப்பிள் ஐபோன் 14-ஐ Flipkart-லிருந்து வெறும் 46,990 ரூபாய்க்கு பெறலாம். ஆப்பிள் 64 ஜிபி சேமிப்பகத்துடன் 3வது ஜென் ஐபோன் எஸ்இயின் அடிப்படை மாடலை அதிக விலையில் விற்பனை செய்கிறது.

iPhone 14 விவரக்குறிப்புகள்

ஆப்பிள் ஐபோன் 14-ல் ஆப்பிள் ஐபோன் 13 இல் உள்ள அதே சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே முன்பக்கத்தில் ஐபோன் 13 போன்ற நாட்ச் மற்றும் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கான 12எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், 12எம்பி சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பை ஃபோன் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 இல், நீங்கள் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளேவைப் பெறுவீர்கள்.

ஐபோன் 14 அம்சங்கள்

ஸ்மார்ட்போன் A15 பயோனிக் சிப்செட் உடன் வருகிறது. இதில் 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பு உள்ளது. ஹேண்ட்செட் iOS 16 நிலையான பதிப்பில் வேலை செய்கிறது. இணைப்பிற்கு, 5ஜி ஆதரவு, வைஃபை, டூயல் சிம், புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் இதர அம்சங்கள் போனில் உள்ளன.

மேலும் படிக்க | ரூ 197 ரீசார்ஜ்..84 நாட்கள் வேலிடிட்டி..அள்ளிக்கொடுக்கும் பிஎஸ்என்எல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News