Jio vs Airtel: 150GB வரை தரவு கிடைக்கும், எந்த நிறுவனத்தின் திட்டம் உங்களுக்கு சிறந்தது? அறிக
உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 125 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட தரவை வழங்கும் திட்டம் மற்றும் இலவச OTT தளம் தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கானது..!!
Airtel Postpaid Plans vs Reliance Jio Postpaid Plans: ப்ரீபெய்ட் மொபைல் நெட்வொர்க்கில் தனது இருப்பை ஆணித்தரமாக நிலை நாட்டியுள்ள முகேஷ் அம்பானி (Mukesh Ambani) நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, இப்போது அதிகமான போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை நெட்வொர்க்குடன் இணைக்க கவனம் செலுத்துகிறது. சமீபத்தில், புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் (Jio Postpaid Plans) திட்டங்கள் தொடங்கப்பட்டன.
நீங்கள் போஸ்ட்பெய்ட் திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர் என்றால், உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 125 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட தரவை வழங்கும் திட்டம் மற்றும் OTT பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) போஸ்ட்பெய்ட் திட்டமான ரூ .799 மற்றும் ரூ .749 கிடைக்கும் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் பற்றிய தகவல்களைக் கொடுப்போம்.
ஜியோ 799 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் (Jio 799 Postpaid Plus Plan):
ரூ .799 என்ற இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் மூலம், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 150 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கும். 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் கொண்ட 2 கூடுதல் குடும்ப சிம் கார்டுகளைப் பெற முடியும்.
ALSO READ | ₹.200-க்கும் குறைவான ஏர்டெலின் 5 மலிவான திட்டங்களின் பட்டியல்!!
ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் மூலம் நீங்கள் தரவு, வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உடன் நெட்ஃபிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Prime) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபிக்கு (Disney Plus Hotstar VIP) இலவச அணுகலைப் பெறுவீர்கள்.
ஏர்டெல் 749 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel 749 Postpaid Plan):
ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டமான ரூ .749 ஐ பார்த்தால், வாடிக்கையாளர்களுக்கு 125 ஜிபி 3G/4G மாதாந்திர டேட்டா ரோல்ஓவர் வசதி கிடைக்கும். எந்தவொரு நெட்வொர்க்கிலும் வரம்பற்ற உள்ளூர் / எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படும்.
இந்த ஏர்டெல் திட்டத்தில், பயனர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) கிடைக்காது. இந்தத் திட்டத்தில் வரம்பற்ற அழைப்புடன் சேர்த்து 2 இலவச கூடுதல் இணைப்புகளை வழங்குகிறது. அதில் ஒன்று வழக்கமான மற்றொன்று டேட்டா டூ டேட்டா இணைப்பு வழங்கப்படும்.
ALSO READ | Jio Fiber திட்டத்தில் OTT பயன்பாடுகள் என்ன? OTT Apps உள்ளடக்கிய திட்டங்கள் எது?
தரவு மற்றும் அழைப்பைத் தவிர, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel XStream App) , 1 ஆண்டுக்கான அமேசான் பிரைம் மற்றும் கைபேசி பாதுகாப்பு (Handset Protection) போன்ற திட்டங்களுடன் சில நன்மைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR