NTPC Recruitment 2021: வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் செய்தி, 2 லட்சம் வரை சம்பளம்!!
NTPC-யில் மருத்துவ நிபுணர் மற்றும் உதவி அலுவலர் பணியிடங்களுக்கான இடங்கள் காலியாக உள்ளதால், இவற்றுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
NTPC Recruitment 2021: அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. என்டிபிசி உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. வேலை தேடுபவர்களுக்கு NTPC ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான அரசு வேலைக்கான ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
NTPC-யில் மருத்துவ நிபுணர் மற்றும் உதவி அலுவலர் பணியிடங்களுக்கான இடங்கள் காலியாக உள்ளதால், இவற்றுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2 விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்
நீங்களும் இந்தப் பணியிடங்களுக்கு (Vacancy) விண்ணப்பிக்க விரும்பினால், செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர், https://open.ntpccareers.net/2021_med_sps/ -க்கு செல்ல வேண்டும். இதற்காக, என்டிபிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, என்டிபிசி மொத்தம் 47 பணியிடங்களுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இத்தனை பதவிகளில் காலியிடங்கள் உள்ளன
மருத்துவ நிபுணர் (Medical Specialist) - 27 காலி இடங்கள்
உதவி நிபுணர் (Assistant Specialist) /நிதி அதிகாரி (Finance Officer) - 20 காலி இடங்கள்
பரிந்துரைக்கப்பட்ட வயது வரம்பு
மருத்துவ நிபுணர் - 37 வயது
உதவி நிபுணர்/நிதி அதிகாரி - 30 வயது
கல்வி தகுதி
மருத்துவ நிபுணர் (பொது மருத்துவம்)
E4 நிலைக்கு - MD/DNB மற்றும் 1 வருட அனுபவம்
E3 நிலைக்கு - MD/DNB தகுதி வாய்ந்த மருத்துவர்
மருத்துவ நிபுணர் (குழந்தை மருத்துவம்)
E4 நிலைக்கு - MD/DNB மற்றும் 1 வருட அனுபவம்
E3 நிலைக்கு - MD/DNB தகுதி பெற்ற மருத்துவர், MBBS அல்லது குழந்தை ஆரோக்கியத்தில் PG டிப்ளமோ, குறைந்தது 2 வருட அனுபவம்
உதவி நிபுணர்/நிதி அதிகாரி
- விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு CA அல்லது ICWA முடித்திருக்க வேண்டும்
சம்பளம் எவ்வளவு இருக்கும்?
மருத்துவ நிபுணர் பதவி
E3 நிலைக்கு - ரூ. 60,000 முதல் ரூ. 1.80 லட்சம் வரை
E4 நிலைக்கு - ரூ. 70,000 முதல் ரூ. 2 லட்சம் வரை
உதவி நிபுணர்/நிதி அதிகாரி
- சம்பளம் 30,000 முதல் 1.20 லட்சம் வரை.
ALSO READ: Reliance JIO Vacancy: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிப்பது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR