10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அஞ்சல் துறையில் தற்போது Gramin Dak Sevaks (GDS) பணிக்கு என்று 4310 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 40 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Indian Railways: அடேங்கப்பா; இந்திய ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய்
SC / ST / PwD / Trans Women மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களிடம் ரூ.100/- மட்டும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூன் 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!