மதுரை எய்ம்ஸில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
மதுரை எய்ம்ஸில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா ஜிப்மர், புதுச்சேரி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வழிகாட்டி நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட சுகாதார நிறுவனமான மதுரை, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) இருந்து வழக்கமான அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எய்ம்ஸ் மதுரை காலி பணியிடங்கள்:
பேராசிரியர் - 20
கூடுதல் பேராசிரியர் - 17
இணைப் பேராசிரியர் - 20
உதவிப் பேராசிரியர் - 37 என மொத்தம் 94 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் Post Graduation, MD/ MS, M.H.A (Masters in Hospital Administration), Ph.D முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 58க்குள் இருக்க வேண்டும்.
அதேபோல் இணை மற்றும் உதவி பேராசிரியர் பணக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 50க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 1,500/-
SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 1,200/-
PWD விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது
சம்பள விவரம்:
பேராசிரியர் ரூ. 1,68,900 – 2,20,400வரை
கூடுதல் பேராசிரியர் ரூ. 1,48,200 – 2,11,400வரை
இணைப் பேராசிரியர் ரூ. 1,38,300 – 2,09,200வரை
உதவிப் பேராசிரியர் ரூ. 1,01,500 – 1,67,400வரை
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட கல்வி தகுதியும், வயது வரம்பும் உடைய விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://jipmer.edu.in/announcement/recruitment-faculty-posts-various-departments-regular-basis-aiims-madurai என்ற ஆன்லைன் இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பதார்கள் 11.06.2022 முதல் 18.07.2022 திங்கள் கிழமை மாலை 04.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR