ராணுவ பொது பள்ளியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
ராணுவ பொது பள்ளியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ பொதுப் பள்ளிகள் (APS) பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதார்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 25 2022 அன்று 10:00 மணி முதல் செப்டம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
PGT, TGT & PRT ஆகிய பதவிகளுக்கு என ராணுவ பொதுப் பள்ளிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
AWES PGT TGT வயது வரம்பு:
முன் அனுபவம் இல்லாதவர்கள் 40 வயதுக்கு கீழ் இருக்க வேண்டுமென்றும், முன் அனுபவம் உள்ளவர்கள் 57 வயதுக்கு கீழ் இருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
PGT – விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.இ அல்லது பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி) முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டம் அல்லது டிப்ளமோவை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | LIC Plan: ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம்!
TGT (Physical Education) – விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பை உடற்கல்வியுடன் ஒரு விருப்பப் பாடமாக படித்து 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும்.
PRT (உடற்கல்வி) – 45% மதிப்பெண்களுடன் உடற்கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | டிப்ளமோ முடித்திருந்தால் போதும் நிதி அமைச்சகத்தில் வேலை - முழு விவரம்
தேர்வு செய்யப்படும் முறை:
Stage 1-Online Screening Test (OST).
Stage 2: Interview
Stage 3: Evaluation of Teaching Skills and Computer Proficiency.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீhttps://edumedias.s3.ap-south-1.amazonaws.com/AWES/General_Instruction.pdf என்ற இணைய முகவரி மூலம் 25.08.2022 முதல் 10.09.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | EV vs Battery: அக்டோபர் முதல் புதிய பேட்டரி விதிகள் அமலுக்கு வருகின்றன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ