அனைவருக்குமே அரசு வேலை மீது எப்போதும் தீராத மோகம் இருக்கும். அரசு வேலையை பெற்றுவிட்டால் பணி பாதுகாப்பு உறுதியாகுமென்பதால், பலர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினாலும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அரசு பணிக்காக முயன்று கொண்டிருக்கின்றனர். அப்படி முயல்பவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, Forensic Experts பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய புலனாய்வு பணியகத்தில் மாதம் 80,000 ரூபாய் வருமானத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிட விவரம்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி மத்திய அரசு பணிக்கு இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


பணிக்கான தகுதி விவரங்கள்:


விண்ணப்பதாரர்கள் Inspectors அல்லது அதற்கு மேல் பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும், Investigation மற்றும் Prosecution of Criminal Cases in the Court of Law ல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


01.08.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுக்கான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.


மேலும் படிக்க | Flight Ticket Offer: வெறும் ரூ.100-ல் விமான பயணம், ரூ.50 லட்சம் மதிப்பிலான நன்மைகள், முந்துங்கள்!!


ஊதிய விவரம்:


மேற்கூறிய பதவிக்கு மாதம் ரூ.80,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. ஆரம்பத்தில் 1 வருடத்திற்கு, தேர்வர்களின் செயல்திறன் மற்றும் சிபிஐயின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பந்த காலம் மேலும் நீட்டிக்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cbi.gov.in/assets/files/vacancy/521830036Advt.pdf என்ற தளத்தில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 26.07.2022க்குள் அனுப வேண்டும்.


மேலும் படிக்க | EPFO விதிகளில் மாற்றம்: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ