தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை - முழு விவரம்
தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தேர்வும், நேர்காணலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பதிவாளர், நிதி அலுவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
பதிவாளர் – 01 பணியிடம்
நிதி அலுவலர் – 01 பணியிடம்
வேலைவாய்ப்பு விவரங்கள்:
பதவியின் பெயர்: பதிவாளர்
ஊதிய அளவு: நிலை-12ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
மேலும் படிக்க | EPFO ஈ நாமினேஷன் மூலம் கிடைக்கும் பல வித பயன்கள்: முழு விவரம் இதோ
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆட்சேர்ப்பு முறை: பிரதிநிதித்துவம் அல்லது ஒப்பந்தத்தின் இடமாற்றம் மூலம் நடைபெற உள்ளது.
நிதி அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:
பதவியின் பெயர்: பதிவாளர், செம்மொழி தமிழ் மத்திய நிறுவனம் (CICT), சென்னை.
ஊதிய அளவு: நிலை-12 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!
காலியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் தேதியின்படி 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
பதிவாளர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cict.in/cictinneww/wp-content/uploads/2022/07/Rules-and-Regulations-and-Application-for-Registrar-Post.pdf என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தையும், நிதி அலுவலர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://cict.in/cictinneww/wp-content/uploads/2022/07/Rules-and-Regulations-and-Application-for-Finance-Officer-Post.pdf இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை – 600100 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட்டின் 5 இலக்க எண் கூறும் முக்கிய தகவல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ