Indian Railways: ரயில் டிக்கெட்டின் 5 இலக்க எண் கூறும் முக்கிய தகவல்கள்!

ரயில் டிக்கெட்டில் இருக்கும் இந்த 5 இலக்க எண் பல முக்கிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 15, 2022, 12:04 PM IST
  • யணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கோடை கால சிறப்பு, விடுமுறை சிறப்பு ரயில்கள் அல்லது பிற சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன.
  • ஒவ்வொரு ரயிலுக்கும் தனிப்பட்ட எண் உள்ளது.
  • ரயிலில் 5 இலக்க எண்ணின் அர்த்தம் என்ன?
Indian Railways: ரயில் டிக்கெட்டின் 5 இலக்க எண் கூறும் முக்கிய தகவல்கள்! title=

நாடு முழுவதும் ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்கும் வகையிலும், ரயில்களை எளிதில் அடையாளம் காணும் பொருட்டும் ரயில்களுக்கு ஐந்து இலக்க எண் வழங்கப்படும் நடவடிக்கை 2019 டிசம்பர் 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதிலிருந்து, முதலில் நான்கு இலக்க எண்ணாக இருந்த ரயில்களின் எண்கள் பின்னர் 5 இலக்க எண்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. டிக்கெட்டில் இருக்கும் இந்த 5 இலக்க எண் பல முக்கிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா. இந்த ரயில் எண் நீங்கள் எங்கு செல்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கூறுவதோடு  மட்டுமின்றி, இந்த எண் உங்கள் ரயிலின் நிலை, ரயிலின் வகை என பல விஷயங்களை எடுத்துக் கூறுகிறது.

ரயிலில் 5 இலக்க எண் கூறும் முக்கிய தகவல்கள்

ஒவ்வொரு ரயிலுக்கும் தனிப்பட்ட எண் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இது அதன் அடையாளமாகும். 5 இலக்கங்களில் உள்ள முதல் இலக்கம் (0-9) வெவ்வேறு எண்களைக் கொண்டுள்ளது. 0 என்றால் இந்த ரயில் ஒரு சிறப்பு ரயில் என்று அர்த்தம். பண்டிகை காலம் மற்றும் விடுமுறை காலங்களில், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பயண தேவை அதிகரிக்கும் போது,  பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கோடை கால சிறப்பு, விடுமுறை சிறப்பு ரயில்கள் அல்லது பிற சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. இதனை எப்போது வேண்டும் என்றாலும் நிறுத்தம் செய்யும் அதிகாரம் ரயில்வே நிர்வாகத்துக்கு உண்டு.

மேலும் படிக்க  | வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45-ஆவது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

முதல் இலக்கத்தில் 1 முதல் 4 வரையிலான எண்

-  முதல் இலக்கம் 1 அல்லது 2 என்றால் இந்த ரயில் நீண்ட தூரம் செல்லும். மேலும், இந்த ரயில் ராஜ்தானி, சதாப்தி, ஜன் சாதர், சம்பர்க் கிராந்தி, கரிப் ரத், துரந்தோ ஆகிய ரயில்களாக இருக்கும்.

- முதல் இலக்கம் 3 என்றால், இந்த ரயில் கொல்கத்தா துணை நகர்ப்புற ரயில் ஆகும்.

- முதல் இலக்கம் 4 என்றால் அது புது தில்லி, சென்னை, செகந்திராபாத் மற்றும் பிற மெட்ரோ நகரங்களின் துணை நகர்ப்புற ரயில் ஆகும்.

முதல் இலக்கத்தில் 5 முதல் 9 வரையிலான இலக்கங்கள்

- முதல் இலக்கம் 5 என்றால் அது பயணிகள் ரயில்.

- முதல் இலக்கம் 6 என்றால் அது MEMU ரயில் ஆகும்.

- முதல் இலக்கம் 7 ​​என்றால் அது DEMU ரயில்.

- முதல் இலக்கம் 8 என்றால் அது முன்பதிவு செய்யப்பட்ட ரயில்.

- முதல் இலக்கம் 9 என்றால் அது மும்பையின் சப் அர்பன் ரயில்.

இரண்டாவது மற்றும் அடுத்த இலக்கம்

இதில் இரண்டாவது மற்றும் அடுத்த இலக்கமும் முதல் இலக்கத்தை பொறுத்தே இருக்கும். ரயிலின் முதல் எழுத்து 0, 1 மற்றும் 2 இல் தொடங்கும் நிலையில், மீதமுள்ள நான்கு எழுத்துக்கள் ரயில்வே மண்டலம் மற்றும் பிரிவைக் குறிக்கும். 

0 - கொங்கன் இரயில்வே

1- மத்திய இரயில்வே, மேற்கு-மத்திய இரயில்வே, வட மத்திய இரயில்வே

2- சூப்பர்ஃபாஸ்ட், சதாப்தி, ஜன் சதாப்தி ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த ரயில்களின் அடுத்த இலக்கங்கள் மண்டலக் குறியீட்டைக் குறிக்கின்றன.

3- கிழக்கு இரயில்வே மற்றும் கிழக்கு மத்திய இரயில்வே

4- வடக்கு இரயில்வே, வட மத்திய இரயில்வே, வடமேற்கு இரயில்வே

5- தேசிய கிழக்கு இரயில்வே, வடகிழக்கு எல்லை இரயில்வே

6- தெற்கு ரயில்வே மற்றும் தெற்கு மேற்கு ரயில்வே

7- மத்திய  தெற்கு ரயில்வே மற்றும் தென் மேற்கு ரயில்வே

8- தெற்கு கிழக்கு இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை இரயில்வே

9- மேற்கு இரயில்வே, வடமேற்கு இரயில்வே மற்றும் மத்திய மேற்கு மத்திய இரயில்வே

மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News