இந்திய கடற்படையானது Tradesman Mate காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,900 மாத ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:


தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Tradesman Mate பணிக்கென மொத்தம் 112 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இந்திய கடற்படை வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


ஊதிய விவரம்:


Tradesman Mate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.


மேலும் படிக்க | அதிரடியாக குறைந்தது எல்பிஜி சிலிண்டரின் விலை: மக்கள் ஹேப்பி


தேர்வு செய்யப்படும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Short Listing செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://erecruitment.andaman.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


மேலும் படிக்க | September 1 முதல் பல முக்கிய மாற்றங்கள்: உங்களுக்கு ஆதாயமா, நஷ்டமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ