அதிரடியாக குறைந்தது எல்பிஜி சிலிண்டரின் விலை: மக்கள் ஹேப்பி

LPG Cylinder Price Cut: சர்வதேச விலை குறைப்புக்கு ஏற்ப எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் (19-கிலோ) விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 1, 2022, 11:47 AM IST
  • எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு.
  • சென்னையில் ரூ. 2,141 ஆக இருந்த விலை, தற்போது ரூ. 2,045 ஆக குறைந்துள்ளது.
  • வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை (14.2 கிலோ டேங்க்) மாற்றப்படவில்லை.
அதிரடியாக குறைந்தது எல்பிஜி சிலிண்டரின் விலை: மக்கள் ஹேப்பி  title=

எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு: சர்வதேச விலை குறைப்புக்கு ஏற்ப எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் (19-கிலோ) விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய விலை குறைப்புக்கு பிறகு டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையும். இது பொது மக்களிடையே பெரிய நிவாரணத்தை கொண்டு வந்துள்ளது.

முக்கிய நகரங்களில் விலை நிலவரம்:

- சென்னையில் ரூ. 2,141 ஆக இருந்த விலை, தற்போது ரூ. 2,045 ஆக குறைந்துள்ளது. 

- டெல்லியில் ரூ. 1,976.50 ஆக இருந்த விலை, தற்போது ரூ. 1,885 ஆக குறைந்துள்ளது. 

- கொல்கத்தாவில், வர்த்தக சிலிண்டரின் விலை முன்னர் ரூ. 2,095.50 ஆக இருந்தது. தற்போது இது ரூ. 1,995.50 ஆக குறைந்துள்ளது.

- மும்பையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 1,936.50-க்கு பதிலாக தற்போது ரூ. 1,844 -க்கு விற்கப்படும். 

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை (14.2 கிலோ டேங்க்) மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மே மாதத்தில், எரிசக்தி விலை உயர்வைத் தொடர்ந்து வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவுக்கு ரூ.2,354 ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க | September 1 முதல் பல முக்கிய மாற்றங்கள்: உங்களுக்கு ஆதாயமா, நஷ்டமா? 

குறிப்பிடத்தக்க வகையில், VAT போன்ற உள்ளூர் வரிகளைப் பொறுத்து எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அதிக வரி உள்ள மாநிலங்களில் விலை அதிகமாக இருக்கும். எல்பிஜி விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் மாற்றியமைக்கப்படுகின்றன.

தற்போது வணிக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் பயனடையும். இருப்பினும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், அதில் பொது மக்களுக்கு வருத்தம் உள்ளது. 

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து மக்களை பாதித்து வருகின்றது:

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை பொது மக்களை தொடர்ந்து பாதுப்புக்கு உள்ளாக்கி வருகிறது. ஜூலை மாதம், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள நுகர்வோர் ரூ.1,003.50க்கு (முன்பு) பதிலாக ரூ.1,053.50 செலுத்த வேண்டியிருந்தது. கொல்கத்தாவில் சிலிண்டர் விலை ரூ.1,029ல் இருந்து ரூ.1,079 ஆக உயர்த்தப்பட்டது. மும்பை மற்றும் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் முறையே ரூ.1,052 மற்றும் ரூ. 1,068.50-க்கு விற்கப்படுகின்றது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலையைப் போலவே, எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நுகர்வோருக்கு மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது.

மேலும் படிக்க | ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - ஏதேனும் ஒரு டிகிரி அவசியம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News