ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - ஏதேனும் ஒரு டிகிரி அவசியம்
இந்திய ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் இரண்டு காலி பணியிடங்கள் கூறப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Consultant (Land Acquisition) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 09.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மாற்றும் விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம்.
ரயில்வே துறை காலிப் பணியிடங்கள்:
Consultant (Land Acquisition) பணிக்கு என 02 பணியிடங்கள் தென் கிழக்கு ரயில்வே துறையில் காலியாக உள்ளது
தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் மாநில அரசு நிறுவனங்களில் R.I / LAO / Spl. LAO / Additional Tahasildar / Tahasildar / Assistant Collector / Deputy Collector ஆகிய பணிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Consultant (Land Acquisition) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து அல்லது ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியத்தின் அளவை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.
மேலும் படிக்க | கொரோனாவின் அக்டோபஸ் கரங்களில் சீனா! லாக்டவுன் மற்றும் பொதுஜன சோதனைகள் மும்முரம்
தேர்வு செய்யும் விதம்:
இந்த அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் விதம்:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://ser.indianrailways.gov.in/cris/uploads/files/1661322947438-LA%20NOTIFICATION%202.pdf என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து செப்டம்ப் 9ஆம் தேதிக்குள் தபால் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | Planet Transits 2022: அடுத்த 120 நாட்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ