சீனா: ஆகஸ்ட் 30 அன்று 51 பேருக்கு COVID-19 நோய்த்தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து மில்லியன் கணக்கான மக்கள் லாக்டவுனை எதிர்கொண்டுள்ளனர். சீனாவில் ஜீரோ-கோவிட் கொள்கை, அதாவது யாருக்குமே கொரோனா பாதிப்பு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் கொள்கையால், நாட்டின் தலைநகரைச் சுற்றியிருக்கும் சீனாவின் ஹெபே மாகாணத்தில் மீண்டும் கடுமையான லாக்டவுன் மற்றும் வெகுஜன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாdஉ நடைபெற உள்ள நிலையில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி டிஸ்சார்ஜ்
சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜினில் உள்ள 1.3 கோடி மக்களும் கட்டாயமாக வெகுஜன கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
China queue for corona tests, it's 40 degrees. pic.twitter.com/SqrMyfMR6c
— Moshe Lesomptier (@MosheLesomptier) August 30, 2022
இதற்கிடையில், இந்தியாவில் மொத்தம் 5,439 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மொத்த COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 4,44,21,162 ஆக உள்ளது. நாட்டில் COVID-19 செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 65,732 ஆக குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | மனிதனிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை நோய்
அமெரிக்காவில் 18,000 பேருக்கு குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெவிக்கின்ரனர். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000ஐத் தாண்டியுள்ளது.
அதேபோல, உலகில் முதன்முறையாக மூன்று கொடூர வைரஸ்கள் ஒருவரை தாக்கியுள்ளது. ஸ்பெயினில் இருந்து திரும்பிய இத்தாலியர் ஒருவருக்கு 9 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி மற்றும் உடலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் படிக்க | கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
அவருக்கு தொடர்ந்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கோவிட், எய்ட்ஸ் மற்றும் குரகு அம்ம்மை என மூன்று நோய்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மூன்று நோய்களுக்கும் காரணமான வெவ்வேறு வைரஸ்கள் ஒருவரை ஒரே நேரத்தில் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தியிருப்பது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று, ஒருவருக்கே பல்வேறு வைரஸ்கள் தாக்குதல் நடத்தினால் அதற்கு என்ன மருந்து கொடுப்பது என கேள்விகள் எழுகின்றன.
மேலும் படிக்க | குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்
மேலும் படிக்க | யப்பா இவ்வளவு பெரிசா! ஐரோப்பாவில் மிகப் பெரிய டைனோசர் இதுதானாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ