ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Data Entry Operator (DEO) பணிக்கு என்று காலிப்பணியிடத்துக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

JIPMER DEO காலிப்பணியிடங்கள்:


ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தற்போது Data Entry Operator (DEO) பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.


Data Entry Operator கல்வித் தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளிலோ, கல்வி நிலையங்களிலோ கண்டிப்பாக ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


அதுமட்டுமின்றி கணினியில் 8000 Key Depression per Hour என்கிற வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆங்கில மொழியில் நன்கு பேச மற்றும் எழுத தெரிந்திருப்பது அவசியமாகும். இத்துடன் MS Office மற்றும் தட்டச்சு (Lower / Higher) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் 


JIPMER DEO அனுபவ விவரம்:


விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட Health / Hospital துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


JIPMER DEO ஊதிய விவரம்:


தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


JIPMER DEO விண்ணப்பிக்கும் முறை:


பல்கலைக்கழக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த இணைப்பு மூலம் online விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்யவும். 


 பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களையும் சேர்த்து Officehbcrjipmer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.06.2022ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | ஜூலை முதல் மத்திய ஊழியர்களின் DA உயரும், எவ்வளவு உயரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR