அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1) நிறுவனம் :
2) இடம் :
சென்னை
மேலும் படிக்க | ஜூலை 1-க்குள் பான் - ஆதார் இணைக்காதவர்களுக்கு இரட்டை அபராதம்!
3) பணிகள் :
பிராஜெக்ட் அசோசியேட்
டெக்கினிக்கல் அசிஸ்டன்ட்
ஸ்கில் லேப் அசிஸ்டன்ட்
அலுவலக உதவியாளர்
4) கல்வி தகுதிகள் :
பிராஜெக்ட் அசோசியேட் மற்றும் டெக்கினிக்கல் அசிஸ்டன்ட் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் வேதியியல், இயற்பியல், பொருள் அறிவியல், கெமிக்கல் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகளில் பி.டெக், எம்.டெக் அல்லது எம்.எஸ்சி போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
ஸ்கில் லேப் அசிஸ்டன்ட் அல்லது அலுவலக உதவியாளர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
5) சம்பளம் :
பிராஜெக்ட் அசோசியேட் - ரூ.32,500/ மாதம்
டெக்கினிக்கல் அசிஸ்டன்ட் - ரூ.20,000/ மாதம்
ஸ்கில் லேப் அசிஸ்டன்ட் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 அல்லது ரூ.200 என கணக்கிட்டு மாத சம்பளமாக வழங்கப்படும்.
6) தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
7) விண்ணப்பிக்கும் முறை :
பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி rusa2p13au@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
8) முகவரி :
பேராசிரியர் என்.பாலசுப்ரமணியன்,
குழு ஒருங்கிணைப்பாளர்,
RUSA பிராஜெக்ட்,
கெமிக்கல் இன்ஜினியரிங் துறை,
ஏசி டெக் வளாகம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை-25.
மேலும் படிக்க | NBCC Recruitment 2022: நவரத்தினா நிறுவனமான என்.பி.சி.சியின் புதிய வேலைவாய்ப்புகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR