தமிழக அரசில் தூய்மைப் பணியாளர் காலிப்பணியிடங்கள் - முழு விவரம்
தூய்மைப் பணியாளர்களுக்கென வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள பகுதி நேர பெண் தூய்மை பணியாளர் பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி பகுதி நேர பெண் தூய்மை பணியாளர் பணிக்கென மொத்தம் 07 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
பகுதி நேர பெண் தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
பகுதி நேர பெண் தூய்மை பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து நேராகவோ இல்லை தபால் மூலமாகவோ மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாம் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 11ஆம் தேதிக்குள் சேர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | Agnipath: அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR