தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி (NIT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி தகுதி :


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Power Electronics / Power Systems பாடப்பிரிவில் M.E / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


மேலும் படிக்க | IBPS RRB: வங்கியில் வேலை வேண்டுமா: உடனடியாக விண்ணப்பிக்கவும்


விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.


முன் அனுபவ விவரம்:


விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் பணியின்போது ரூ.31,000வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியத்துடன் 18% HRA (ரூ.36,580/- மொத்த ஊதியம்) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் குறித்து தகுதியான விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த இணைய இணைப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 


மேலும் படிக்க | வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி: ஆர்பிஐ-ன் பெரிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20.06.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் அறிவிப்பில்  Dr.Shelas Sathyan, Department of Electrical and Electronics Engineering, National Institute of Technology Tiruchirappalli, Tamil Nadu-620015 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR