ஆல் இந்திய ரேடியோவில் பணிபுரிய அறிய வாய்ப்பு!
பிரசார் பாரதியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரசார் பாரதி (அகில இந்திய வானொலி) ஆனது சில வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள நியூஸ் எடிட்டர், வெப் எடிட்டர், கிராபிக் டிசைனர், செய்தி வாசிப்பாளர், நியூஸ் ரீடர் கம் ட்ரான்ஸ்லேட்டர் போன்ற இடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்தெடுக்க உள்ளது.
மேலும் படிக்க | ரயில்வேயில் வேலை, +2 படித்திருந்தால் போதும்: இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவும்
1) நிறுவனம்:
பிரசார் பாரதி (அகில இந்திய வானொலி)
2) பணிகள்:
*நியூஸ் எடிட்டர்
*வெப் எடிட்டர்
*கிராபிக் டிசைனர்
*செய்தி வாசிப்பாளர்
*நியூஸ் ரீடர் கம் ட்ரான்ஸ்லேட்டர்
3) தகுதிகள்:
*விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி/ கிராஜுவேஷன்/ போஸ்ட் கிராஜுவேஷன்/ டிப்ளமோ ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
*மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு ஏற்ப சிறந்த மொழித்திறன் உடையவராக இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் ரேடியோ அல்லது டிவியில் பணியாற்றிய முன் அனுபவத்தினை பெற்றிருக்க வேண்டும்.
4) வயது வரம்பு:
மேற்கண்ட பணிகள் அனைத்திற்கும் 21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
5) சம்பளம்:
தேர்வு செய்யப்படும் நபர்களின் திறமைக்கேற்ப மாத மாதம் ஊதியம் வழங்கப்படும்.
6) தேர்வு முறை:
எழுத்து தேர்வு, வாய்மொழித்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
7) விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ.300 கட்டணமும், எஸ்சி/எஸ்டி பிரிவினரை சார்ந்தவர்களுக்கு ரூ. 225 கட்டணமாக வசூலிக்கப்படும்.
8) விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
9) விண்ணப்பிக்க கடைசி தேதி:
31/03/2022
10) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி:
துணை இயக்குனர்,
எண்.223, இரண்டாவது தளம்,
புதிய சர்விஸ் டிவிஷன்,
அகில இந்திய வானொலி,
புதிய ஒளிபரப்பு நிலையம்,
பாராளுமன்றம் தெரு,
நியூ டெல்லி-110001.
மேலும் படிக்க | இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR