தமிழ்நாடு அரசு மீன்வளம் மீனவர் நலத்துறையில் சென்னை மண்டலா மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை பொதுப்போட்டி (முன்னுரிமை பெற்றவர்) பிரிவில் சில தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தகுதிகள்:


எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.  


வயது வரம்பு:


1) ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியின் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 37 வரை.


2) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லீம்) வகுப்பினர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை.


3) இதர வகுப்பினருக்கு வயது வரம்பு 18 முதல் 32 வரை.


சம்பளம்:


Level-1 - ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :


மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை இணை இயக்குநர்(மண்டலம்),
சென்னை அலுவலகம்,
DMS வளாகம் மூன்றாவது தளம்,
தேனாம்பேட்டை,
சென்னை-600006.


தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10/01/2022ம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு 044-24328596 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.


ALSO READ | PM Kisan Yojana: உங்களுக்கு ரூ.2000 இன்னும் வரவில்லையா? அப்ப இத பண்ணுங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR