PM Kisan Yojana: உங்களுக்கு ரூ.2000 இன்னும் வரவில்லையா? அப்ப இத பண்ணுங்க

10வது PM கிசான் தவணையின் நிலையை நீங்கள் ஆன்லைனில் பார்க்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 11:46 AM IST
  • பிரதமர் நரேந்திர மோடி 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வெளியிட்டார்.
  • விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.2000 பெறுவார்கள்.
  • பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கி வருகிறது.
PM Kisan Yojana: உங்களுக்கு ரூ.2000 இன்னும் வரவில்லையா? அப்ப இத பண்ணுங்க title=

புதுடெல்லி: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் 10வது தவணையை, கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 1ம் தேதி வெளியிட்டார்.

10வது தவணையின் (PM Kisan Samman Yojana) ஒரு பகுதியாக, 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் (Farmers) தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு சில விவசாயிகள் தங்களுக்கு இதுவரை தவணைத் தொகை வரவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் PM கிசான் (PM Kisan) திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயியாக இருந்தும், 10வது தவணையைப் பெறவில்லை என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் தற்போதைய ஸ்டேட்டஸ் ஐ சரிபார்த்து உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாயை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் தொகையானது தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.2000 வீதம் என மூன்று வெவ்வேறு தவணைகளில் ட்ரான்ஸ்பர் செய்யப்படும்.

ALSO READ | GSTR Filing: வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி, இந்த காலக்கெடுவை நீட்டித்தது அரசு 

விவசாயிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10வது பிஎம் கிசான் தவணையின் நிலையை எளிதாக சரிப்பார்க்கலாம். அதன்படி 'Coming Soon' என்று ஸ்டேட்டஸ் காட்டினால், 10வது பிஎம் கிசான் தவணையின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அர்த்தம்.

PM கிசான் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் ஸ்டேட்டஸை எவ்வாறு சரிபார்பது என்று பார்போம்
1: PM Kisan Yojana - pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2: விவசாயிகள் கார்னர் பகுதிக்குச் செல்லவும்.
3: விவசாயிகள் கார்னர் பிரிவில், பயனாளிகள் பட்டியல் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
4: மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
5. Get Report ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
6: புதிய திரையில், பயனாளிகளின் முழுமையான பட்டியலைக் காண்பீர்கள். பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம். 

இதற்கிடையில், பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளின் புகார்களைக் கேட்கவும் தீர்க்கவும் அரசாங்கம் பல ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ 
1. PM கிசான் ஹெல்ப்லைன் எண்:155261
2. PM கிசான் மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109
3. PM கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011—23381092, 23382401
4. PM கிசான் கட்டணமில்லா எண்: 18001155266
5. PM கிசானின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606
6. மின்னஞ்சல் ஐடி: pmkisan-ict@gov.in

ALSO READ | செல்போன் தொலைந்து போனால் UPI விவரங்களை பாதுகாப்பது எப்படி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News