வடபழநி முருகன் கோயிலில் வேலை வாய்ப்பு - 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
வடபழநி முருகன் கோயிலில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருக்கும் சூழலில் பத்தாம் தேகுப்பு தேர்ச்சி போதுமானது.
வடபழனி முருகன் கோயிலில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்ற்ன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.
காலிப் பணியிடங்கள்:
இளநிலை உதவியாளர் – 04
தட்டச்சர் – 01
ஓட்டுநர் – 01
உதவி மின்பணியாளர் – 01
நாதஸ்வரம் – 02
உதவி அர்ச்சகர் – 09
உதவி பிரசாரகம் – 02
உதவி சுயம்பகம் – 01
தேவராயம் – 02
கல்வி தகுதி:
இளநிலை உதவியாளர் – 1ஆவது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி
தட்டச்சர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி. அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும்.
அசிஸ்டெண்ட் எலக்ட்ரீசியன் – எலக்ட்ரிக்கல்/வயர்மேன் துறையில் ஐடிஐ & எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டு வழங்கிய ஹெச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நாதஸ்வரம் & மற்ற பணிக்கு – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Bal Aadhaar Card: குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை!
சம்பள விவரம்:
இளநிலை உதவியாளர் – Pay Matrix 22 ரூ.18500 – 58600
தட்டச்சர் – Pay Matrix 22 ரூ.18500 – 58600
ஓட்டுநர் – Pay Matrix 22 ரூ.18500 – 58600
உதவி மின் பணியாளர் – Pay Matrix 18 ரூ.16600 – 52400
நாதஸ்வரம் – Pay Matrix 25 ரூ.19500 – 62000
உதவி அர்ச்சகர் – Pay Matrix 15 ரூ.15900 – 50400
உதவி பிரசாரகம் – Pay Matrix 10 ரூ.10000 – 31500
உதவி சுயம்பகம் – Pay Matrix 10 ரூ..10000 – 31500
தேவராயம் – Pay Matrix 16 ரூ.15700 – 50000
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04.10.2022 மாலை 5:45க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ