Bal Aadhaar Card: குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை!

குழந்தைகளுக்கான ஆதார் அட்டை: 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டைக்கு பயோமெட்ரிக் விவரங்கள் தேவையில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 14, 2022, 07:14 PM IST
  • நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை.
  • பதிவுப் படிவத்துடன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகலையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பெற்றோர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது பாஸ்போர்ட்டின் நகலை தங்கள் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
Bal Aadhaar Card: குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை!  title=

இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. மேலும் பல ஆவணங்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அரசாங்கத் திட்டத்திலும் பயன்பெற, உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும். ஆதாரை இயக்கும் UIDAI, குழந்தைகளுக்கான ஆதார் அட்டையையும் வழங்குகிறது. இது நீல நிறத்தில் உள்ளது. நீல நிற ஆதார் அட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

நீல நிற ஆதார் அட்டை என்னும் பால் ஆதார்

UIDAI ஆனது 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நீல நிற ஆதார் அட்டையை வழங்கியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் தேவையில்லை. குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்கள் 5 வயது வரை மாறிக்கொண்டே இருப்பதா. இந்தக் குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரமாக எடுத்துக் கொண்டு UIDAI ஆதார் அட்டையை வழங்குவதில்லை.

நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை

 UIDAI விதிகளின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டையைப் பெற, குழந்தையின் பெற்றோருக்கு ஆதார் அட்டை இருப்பது அவசியம். அவர்களில் ஒருவரின் ஆதார் அட்டை,  குழந்தையின் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கு முதலில் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆதார் அட்டை மையத்திற்கு செல்ல வேண்டும்.

மேலும் படிக்க  | ஆதார் தரவுகளை பாதுகாக்க பயோமெட்ரிக்சை 'லாக்' செய்தால் போதும்: முழு செயல்முறை இதோ

ஆதார் மையத்திற்கு சென்று, குழந்தையின் பாதுகாவலர், 'பால் ஆதார் அட்டை' பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, பதிவுப் படிவத்துடன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகலையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன், பெற்றோர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமம், பான் கார்டு அல்லது பாஸ்போர்ட்டின் நகலை தங்கள் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும். உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு உங்கள் குழந்தையின் ஆதார் அட்டை அனுப்பப்படும்.

மேலும் படிக்க |  ஆதார் எண் - போலி சிம் கார்டுகள் மோசடி; கண்டறியும் எளிய முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News