பள்ளியில் உள்ள சிற்றுண்டிகளில் நொறுக்குத்தீனிளுக்கு தடைவிதித்து தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இனி துரித உணவுகளுக்கு அனுமதி இல்லை - சிப்ஸ், பொரியல், பீட்சா மற்றும் "குலாப் ஜமுன்" ஆகி துரித உணவுகளுக்கு, பள்ளி கேன்டீன்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி உணவு விடுதிகளில் துரித உணவு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரும் வரைவு ஒழுங்குமுறை ஒன்றை இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. 


பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டருக்குள் பள்ளி கேண்டீன் மற்றும் விடுதி சமையலறை உள்ளிட்டவற்றில் துரித உணவை விற்பனை செய்தல், விநியோகித்தல் மற்றும் விளம்பரம் செய்வது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளது. 


இது குறித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; அதிக கொழுப்பு, அதிக காரம், அதிக உப்பு அல்லது இனிப்புகள் நிறைந்த உணவுகள் மாணவர்களுக்கு கேடு விளைவிக்க கூடியது. எனவே பள்ளிகளில் உள்ள கேண்டீன்களில் நொறுக்குத்தீனிகள் மற்றும் மேற்கண்ட விதமான உணவுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அந்த கடைக்காரர்களும் நொறுக்குத்தீனிகளை விற்பனை செய்தல் கூடாது. இதுகுறித்து உணவு பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்கனவே உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.


பள்ளி சிற்றுண்டிகளில் நொறுக்குத்தீனி மற்றும் அதுதொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம்பெற கூடாது. இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுக்கும் முறையாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நல்ல உணவு மட்டுமே மாணவர் நலனுக்கு உறுதுணையாக இருக்கும். இதர தரமற்ற பொருட்கள் அவர்களது உடல்நலனை பாதிக்கும். எனவே, மாணவர்களின் உடல்நலம் பேணுவது முக்கியம் என்ற அடிப்படையில் இந்த அறிவுரைகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்று அமல்படுத்த வேண்டும்.


இது தொடர்பாக அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலமே தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் என்ன வகையான உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்? அது தரமானதா? என்று ஆய்வு செய்ய வேண்டும்" என FSSAI இன் தலைமை நிர்வாக அதிகாரி பவன் அகர்வால் தெரிவித்துள்ளார்.