உங்கள் ஆதார் அட்டையில் எத்தனை தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள என்பது குறித்து தெரிந்துக்கொள்ள ஒரு வழியைத் தேடுகிறீர்களா? தொலைத் தொடர்புத்துறை (Department of Telecommunications) அறிமுகப்படுத்திய ஒரு போர்ட்டல் மூலம் இது சாத்தியமாகும். இது தனிநபர்கள் தங்கள் ஆதார் எண்ணில் எத்தனை தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை சரிபார்க்க உதவுகிறது. இதன்மூலம் நீங்கள் பயன்படுத்தாத எண்ணை நீக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ஆந்திரா - தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே இந்த வசதி:
தொலைதொடர்பு சந்தாதாரர்கள் தங்கள் ஆதார் எண்களில் (Adhaar Card Mobile Numbers) பதிவு செய்யப்பட்ட அனைத்து தொலைபேசி எண்களையும் தெரிந்துகொள்ள ஏப்ரல் மாதத்தில் மோசடி தடுப்பு மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் (TAFCOP) போர்ட்டலை டிஓடி (DoT) அறிமுகப்படுத்தியது. இந்த போர்டல் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் விரைவில் நாட்டில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று டிஓடி குறிப்பிட்டுள்ளது.


TAFCOP போர்டல் என்பது "வாடிக்கையாளர்களுக்கு உதவவும், அவர்களின் பெயரில் இருக்கும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை சரிபார்க்கவும் மற்றும் ஒரே அடையாள அட்டையில் (Identity Card) கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்களை முறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது."


ALSO READ | Aadhaar Card: ஆதார் அட்டை தொடர்பான இந்த இரண்டு சேவைகளையும் UIDAI நிறுத்தியுள்ளது


9 மொபைல் இணைப்புகளை பதிவு செய்யலாம்:
DoT அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு சந்தாதாரரும் 9 மொபைல் இணைப்புகளை பதிவு செய்யலாம். மோசடி தடுப்பு மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் (TAFCOP) மூலம், உங்கள் ஆதார் அட்டையில் எத்தனை தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


உங்கள் ஆதார் எண்ணில் பதிவுசெய்யப்பட்ட எண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்:
1. TAFCOP போர்ட்டலுக்குள் நுழைந்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
2. பிறகு OTP-ஐ என்பதை கிளிக் செய்யவும். 
3.  உங்கள் தொலைபேசியில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு Validate என்பதைக் கிளிக் செய்க.
4. TAFCOP போர்டல் இப்போது உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட எண்களைக் காண்பிக்கும்.


ALSO READ | Aadhaar Card Latest News: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அப்டேட்: ட்வீட் செய்த UIDAI


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR