மழைக்காலம் வரவுள்ளது. இப்போதே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடைமழை அடித்து ஊற்றுகிறது. இந்த மழைக்காலத்திற்கு ஏற்றவாறு பல ஸ்நாக்ஸ் தின்பன்டங்கள் உள்ளன. ஆனாலும் சமோசாவிற்கு இணை சமோசாதான். 2020ஆம் ஆண்டு கடும் கொரோனா பரவலாம் இந்தியா முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் நமக்குள் இருந்த பல திறமைசாலிகள் வெளியில் வந்தனர். அப்படித்தான் காஜல் அகர்வாலுக்குள் இருந்த சமையல் கலைஞரும் வெளியில் வந்தார். அவர், தானே செய்த சமோசாவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கான ரெசிப்பியை தனது அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார். சரி, அந்த சமோசாவை எப்படி செய்வது? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Trisha: ‘இது தெரியமா போச்சே..’ த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம் இதுதானா?


சமோசா செய்வதற்கு தேவையான பொருட்கள்..


நல்ல சமோசா செய்வதற்கு நமக்கு மிகவும் அதிகமான பொருட்கள் எல்லாம் தேவையில்லை. எல்லாம் அளவுடன் இருந்தால் போதும். உங்களுக்கு ஏற்ற அளவில் பின்வரும் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு சராசரியான அளவு உதாரணத்திற்காக கொடுக்கப்படுகிறது:


-மைதா மாவு 260 கிராம்
-வெண்ணெய் 80 கிராம்
-உப்பு தேவையான அளவு
-தண்ணீர் அரை கப்
-ஓம விதை அரை டீஸ்பூன்
-சமோசாவிற்கு உள்ளே உங்களுக்கு எதை வைத்து சாப்பிட பிடிக்குமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் (உருளைக்கிழங்கு, கேரட், கார்ன் போன்ற பொருட்கள்)
-2-3 கரண்டி சமையல் எண்ணெய்
-சீரகம் தேவையான அளவு
-கொத்தமல்லி
-வெட்டிய பச்சை மிளகாய்
-வேர்கடலை 50 கிராம்
-பச்சை பட்டானி
-பன்னீர்


செய்முறை:


சமோசாவை எப்படி செய்வது? 


-முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாமாவுடன் உப்பு மற்றும் ஜல்ஜீரா தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் சமோசாவிற்கு தனித்துவமான சுவையை கொடுக்கும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் விட்டு சமோசா பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். 


-உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து அதனுடன் பச்சை மிளகாய், உப்பு மற்றும் உங்கள் காரத்திற்கு ஏற்ப என்ன மசாலா வேண்டுமோ அதை சேர்த்துக்கொள்ளுங்கள். 


- ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். மேற்கூறியவற்றை  இதனுடன்ச் சேர்த்து வதக்குங்கள். இதை இப்படியே 15 நிமிடம் வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கிய பிறகு, இறக்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன் தேவையான அளவு பன்னீர் கட்டிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், 


-இப்போது சமோசா செய்ய ஆரம்பிக்கலாம். மைதாவில் இருந்து குட்டி குட்டி உருண்டைகளை முதலில் உருட்டுங்கள்.


-உருட்டிய உருண்டைகளை சப்பாத்தி உருட்டும் கட்டையை வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல தேயுங்கள். பிறகு இவற்றை அரைவட்டங்களாக கட் செய்ய வேண்டும். 


-வெட்டியவற்றை முக்கோன வடிவிற்கு கொண்டுவர வேண்டும். இதை செய்வதற்கு பொறுமை மிகவும் முக்கியம். ஒரு முனையுடன் இன்னொரு முனை ஒட்ட வேண்டும். சமோசாவிற்குள் வைக்க வேண்டியவற்றை வைப்பதற்கான இடம் இருந்தால் போதும். 


-சமோசா ஃபில்லிங்க்ஸை சமோசாவிற்குள் வைத்து மூடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சமோசாவை பொறித்து-ருசித்து சாப்பிடலாம்.


-சமோசாவிற்கு ஏற்றவாறு தக்காளி சாஸ் அல்லது புதினா-தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். 
-உங்களுக்கு சமோசா மாவு தனியாக பிணைய தெரியாது என்றால் இதற்காகவே பிரத்யேகமாக தயாரான சமோசாக்கள் விற்கின்றன. இவற்றை வாங்கி அதில் நிங்கள் சமைத்த ஃபில்லிங்க்ஸை மட்டும் வைத்து பொறித்து சாப்பிடலாம். 


மேலும் படிக்க | சிம்புவை போல நீங்களும் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ