மும்பை: பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 87. தேசிய வானொலி ஊடகமான ஆகாசவானியில் நான்கு தசாப்தங்களாக செய்திகள் வாசித்து தமிழர்களை வசீகரித்த குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி. ஆகாசவானி வானொலியில் ஒலிக்கும் அவரது கனகம்பீரமான குரல் மூலம் செய்திகளை தெளிவாக தெரிவிப்பார். அன்று வானொலி ஒன்றே செய்திகளை மக்களுக்கு அளிக்கும் ஊடகமாக இருந்தது. தமிழகத்தில் தஞ்சாவூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்து தலைநகர் டெல்லியில் தனது குரலால் கோலோச்சியவர் திருமதி சரோஜ் நாராயணசுவாமி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அன்னாரின் மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை செளந்தரராஜன், மூத்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.



ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்ற சரோஜ் நாராயணசுவாமி, தாய் மொழியான தமிழில் நல்ல புலமையுடன் இருந்தார். ஆகாசவாணி செய்திப் பிரிவில் ஆங்கிலத்தில் தரும் செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து, அதை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி வாசிக்க வேண்டும் என்பதால், தமிழ் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஆங்கில புலமையும் அவசியம்.


மேலும் படிக்க | அலர்ட்! மறந்து கூட இந்த இடங்களில் இருந்து ஐபோன் வாங்காதீர்கள்


பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த திருமதி சரோஜ் நாராயணசாமி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்மராவ் உள்ளிட்டோரை நேர்காணல் செய்துள்ளார்.


1962ல் வானொலி பணியில் சேர்ந்த சரோஜ் நாராயணசுவாமி, அந்த பணியில் சுமார் 35 ஆண்டுகாலம் தமிழ் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். அதன்பிறகு என்டிடிவியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்


ஒலிபரப்புத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி, தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்த சரோஜ் நாராயணசாமி நேற்று (ஆகஸ்ட் 13) இயற்கை எய்தினார்.  


மேலும் படிக்க | மனநலக் கவலைகளை போக்கும் உணவுகள்: உணவே மகிழ்ச்சி சாப்பாடே சாஸ்வதம்


மேலும் படிக்க | OPPO K10 5G -க்கு மெகா தள்ளுபடி: பிளிப்கார்ட்டில் முந்துங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ