Old Monk வளர்சிக்கு வித்திட்ட கபில் மோகன் மரணம்!
1973-ல் இருந்து மோகன் மேகின் தலைவர் மற்றும் எம்.டி. -யாக இருந்த கபில் மோகன், கடந்த ஜனவரி 6 அன்று காலமானார். ரம் `ஓல்ட் மங்க்`-ன் வளர்சிக்கு பின்னால் இருந்த மாமனிதர் என்று கருதப்படும் இவர் தனது 88 வயதில் காலமானார்.
1973-ல் இருந்து மோகன் மேகின் தலைவர் மற்றும் எம்.டி. -யாக இருந்த கபில் மோகன், கடந்த ஜனவரி 6 அன்று காலமானார். ரம் "ஓல்ட் மங்க்"-ன் வளர்சிக்கு பின்னால் இருந்த மாமனிதர் என்று கருதப்படும் இவர் தனது 88 வயதில் காலமானார்.
கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான உடல்நிலையால் தவித்து வந்த இவர் கடந்த ஜன., 6 ஆம் நாள் காஜியாபாத்தின் மோகன் நகர் பகுதியில் இறந்தார்.
ஓல்ட் மங்கின் முதல் பிரபலமான மது இவரின் தலைமையிலேயே உருவானது.
இத்துடன், கஜியாபாத்தில் உள்ள மார்ஞ்சன் மோகன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராகவும் பொருப்பு வகித்து வந்தார்.
இந்தியாவில் விற்பனையான மலிவான ரம் வகைகளில் ஒன்று புகழ்பெற்ற ஓல்ட் மங்க் ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில் மோகன், மோகன் மேக்கின் நிர்வாக இயக்குனராக இருந்தபோது, "எங்கள் பொருட்களை குறித்து நாங்கள் விளம்பரம் செய்யவில்லை, நான் இந்த நாற்காலியில் இருக்கிறேன் எனில், நாங்கள் விளம்பரம் செய்யாமல் இருப்பது தான் காரணம்." என குறிப்பிட்டிருந்தார்.
பத்ம ஸ்ரீ விருது பெற்ற மோகன், 1966-க்கு முன் ட்ரேட் லிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றினார்.
மேலும் இந்திய ஆயுதப்படைகளில் பிரிகேடியராக பணியாற்றி ஓய்வு பெற்றதால் இவருக்கு விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகது.