Karadaiyan Nombu 2024 Date, Rituals, Puja Timings : காரடையான் நோன்பு என்பது பெண்கள் வழிபட்டு கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். இதனை சாவித்ரி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. சாவித்ரி காட்டில் அடை செய்து படைத்தமையால் காரடையான் நோன்பு என்று அழைக்கின்றனர். இந்த நோன்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என ஐதீகம். கற்பில் சிறந்தவளான சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து யமதேவன் அவனுடைய உயிரைப் பரித்துச் சென்ற போதிலும், யமனுடனிமிருந்து மீட்டு வந்தாள் என்று நம்பப்படுகிறது. சாவித்ரி ஆனிமாத அமாவாசையிலிருந்து மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டாள். இந்த காலத்தினை சாவித்ரி விரத கல்பம் என்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரியுமத்சேனன் மன்னனின் மகன் சத்யவான். அசுபதி மன்னின் மகள் சாவித்திரி. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சாவித்திரி (Savitri and Satyavan) கவுரி விரதத்தினை மேற்கொண்டிருந்தாள். அந்த விரதக் காலத்திலேயே சத்யவான் காட்டில் இறந்தார். தான் மேற்கொண்ட கவுரி விரதத்தினை முடிக்க மண்ணால் செய்த வடையை செய்து வழிபட்டாள். விரதம் பூர்த்தியானது. அதன் பின்பு யமதர்மனிடம் வேண்டி தன்னுடைய கணவனை மீட்டாள்.


மேலும் படிக்க | தாய் அல்லது மனைவி படத்தை உங்கள் பர்ஸில் வைத்துள்ளீர்களா? இந்த விஷயத்தில் ஜாக்கிரதை!


காரடையான் நோன்பு பூஜை செய்யும் முறை:
காரடையான் நோன்பு (Karadaiyan Nombu) நாளில், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும். வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிட வேண்டும். அதன் மீது ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதன் மீது நுனி வாழை இலையை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.


பின்னர் அந்த அடையை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். அதேபோல் காரடையான் நோன்பு அன்று சொல்ல வேண்டிய சில ஸ்லோகங்களை கூறி பிராத்திக்க வேண்டும்.


காரடையான் நோன்பு பூஜை செய்ய வேண்டிய நேரம்:
இந்த ஆண்டு காரடையான் நோன்பு (Karadaiyan Nombu 2024 Rituals) மார்ச் 14ம் தேதி வியாழக்கிழமை அதாவது இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் காலை 06:40 முதல் பகல் 12:48 வரை நோன்பு கடைபிடிக்க வேண்டும். அதாவது 6 மணி நேரம் 11 நிமிடங்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மஞ்சள் சரடு மாற்றும் பழக்கம் உள்ளவர்கள் பகல் 12:40 மணி வரையிலான நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.


காரடையான் நோன்பு கடைபிடிக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்:
காரடையான் நோன்பு வழக்கம் இல்லாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி அம்பாளை வழிபடலாம். மேலும் அம்மனுக்கு ஸ்லோகம் துதிக்கலாம். அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டலாம். இதுவும் காரடையான் நோன்பு இருந்த பலனை பெற்றத் தரும். 


காரடையான் நோன்பு அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவராக அமைவார் என்பது ஐதீகம்.


மேலும் படிக்க | vastu tips: திருமணம் ஆகாத பெண்கள் புதன்கிழமை தலைக்கு குளிக்க கூடாது! ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ