பொம்மையை 8 மாதங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட பாடிபில்டரின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாடிபில்டர் டோலோச்சோ தனது வாழ்க்கையை செக்ஸ் பொம்மை மார்கோவுடன் தொடங்க அதை திருமணம் செய்துள்ளார். 'காதலுக்கு கண் இல்லை', 'காதல் கண்ணை மறைக்கும்', 'காதல் வயது வித்தியாசத்தைப் பார்க்காது', 'காதலுக்கு ஜாதி, மதம் கிடையாது' என்றெல்லாம் பல ஏக வசனங்கள் காதலைப்பற்றி காதலர்கள் பேசுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கஜகஸ்தானைச் (Kazakhstan) சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற பாடிபில்டர் இந்த ஆண்டு அதை நிரூபித்துள்ளார். 


யூரி டோலோச்ச்கோ தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்திய பொம்மையுடன் எட்டு மாதங்கள் டேட்டிங் செய்துள்ளார். கடந்த ஆண்டு அந்த பொம்மையை ப்ரொபோஸ் செய்தாராம். அதன்படி இந்த மாதம் அவர் இறுதியாக அந்த பொம்மையை திருமணமும் செய்திருக்கிறார். இந்தச் செயல் வினோதமான அல்லது வழக்கத்திற்கு மாறானதாக தோன்றலாம். டோலோச்சோ மார்கோ என்ற தனது செக்ஸ் பொம்மையை (sex doll) அவர் மிகவும் நேசிக்கிறார் என்பது தெரிகிறது. 


ALSO READ | ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..!



கஜகஸ்தானைச் சேர்ந்த அந்த பாடிபில்டர் தன் திருமண விழாவின் ஒரு சிறு காணொளிப் பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக, யூரி டோலோச்சோவிடம் 2019 ஆம் ஆண்டு எழுப்பிய கேள்விக்கு, மார்ச் மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். 


ALSO READ | காலையில் உடலுறவு கொள்வது நல்லதா?... நிபுணர்கள் கூறும் 6 காரணம்..!


ஆனால், கொரோனா வைரஸ் (Coronavirush) தொற்று அவரது திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தது. மேலும் அவர் திருமணத்தை சில மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது. அக்டோபரில், திருநங்கைகளின் பேரணியில் அவர் தாக்கப்பட்டபோது அவரது திருமணத்தில் மற்றொரு தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.



டோலோச்சோ, மார்கோ என்ற அந்த பொம்மையுடன் 8 மாதங்களுக்கும் மேலாக உறவு கொண்டிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். டோலோச்சோ, பாலியல் பொம்மைக்கு சில மாற்றங்களைச் செய்ய பொம்மையை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். ஏனெனில், மார்கோ தோற்றம் திருமணத்திற்கு ஏற்றதாக இல்லையாம். பின்னர், பொம்மைக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டோலோச்சோ, புது வடிவத்தை ஏற்பது கடினம் என்றாலும் அது பழகிவிடும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து நிஜ மருத்துவர்களுடன் ஒரு உண்மையான கிளினிக்கில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR