Kitchen Hacks: பொதுவாக வாழைப்பழம் சாப்பிடாதவர்கள், பிடிக்காதவர்களை காண்பது மிகவும் அரிது. எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த இந்த பழம் மிகவும் மலிவானதும் கூட. அதனால், எல்லோராலும் வாங்கி சாப்பிட முடியும். ஆனால் வாழைப்பழங்களை அழுகாமல் காப்பாற்றுவது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. வாழைப்பழத்தை எப்படி நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பது என்பது பெரிய சவால் தான். அதுவும் கோடை காலத்தில் மிக சீக்கிரம் அழுகி விடும். ஆனால் சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் வாழைப்பழத்தை நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. இந்நிலையில், வாங்கிய பிறகு வாழைப்பழம் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள சில முறைகளை முயற்சிக்கலாம். இந்த முறைகளை முயற்சிப்பது எளிதானது மற்றும் அவற்றின் பலன்களும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும்


வாழைப்பழங்களை பிரெஷ்ஷாக வைத்திருப்பது எப்படி?


1. வாழைப்பழம் அழுகாமல் பாதுகாக்க, அதனை தொங்கவிடும் வகையில் ஹேங்கர்களை சந்தையில் இருந்து வாங்கி, அதில் வாழைப்பழத்தை தொங்கவிடவும். வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக இருக்கும். வாழைப்பழத்தை தொங்க விடும் ஹாங்கர்கள் ஸ்டீலிலும், மரத்திலும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை ஆன் லைன் தளங்களிலும் வாங்கலாம். கடைகளில் வாழைப்பழத்தை தொங்க விடுவதன் காரணமும் இது தான்


2. வாழைப்பழங்கள் பிரெஷ்ஷாக இருக்கவும், விரைவில் கருப்பாக மாறாமல் இருக்கவும், அவற்றை வாங்கும் போது, ​​பாதி அழுகாமலும், பாதி காயாகவும் வாங்குவது சிறந்தது. மேலும், அதில் கருப்பு நிறத்தில் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். வாழைப்பழங்கள் நன்றாக பழுத்த்திருந்தால். அவை, சேமித்து வைக்கும் போது அவை விரைவாக கெட்டுவிடும்.


3. வாழைப்பழங்களை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் வாங்கிய பிளாஸ்டிக் பையை அகற்றி, காற்றோட்டமாக வைக்க வேண்டும். வாழைப்பழத்தை பாலிதீன் பையில் வைத்திருந்தால், அதிலிருந்து உருவாகும் எஎத்திலீன் வாயு, வாழைப்பழத்தை மிக சீக்கிரம் பழுக்க வைக்கும். அத்தகைய சூழ்நிலையில், வாழைப்பழங்களை வீட்டிற்கு கொண்டு வந்து வேறு பைக்கு மாற்ற வேண்டும்.


4. வாழைப்பழ காம்புகளை மட்டும் பிளாஸ்டிக்கால் மூடி வைப்பதன் மூலம் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதன் காரணமாக வாழைப்பழம் சீக்கிரம் பழுக்காமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


5. வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க வேக்ஸ் பேப்பரை பயன்படுத்துவதும் பலன் தர்ஃபும். இதற்காக, வாழைப்பழத்தை மெழுகு காகிதத்தினால், சுற்றி, முழுமையாக மூடி வைப்பதால், வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்கும்.


வாழைப்பழங்கள் மட்டுமின்றி மற்ற பழங்களும் எத்திலீன் வாயுவை வெளியிடும். அதனால் வாழைப்பழங்களை மற்ற பழுத்த பழங்களுடன் சேர்த்து வைப்பதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழங்களை தனித்தனியாக வைத்திருந்தால், அவை விரைவாக பழுக்காது, புதியதாக இருக்கும்.


வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு பதிலாக அறை வெப்பநிலையில் வைக்கலாம். ஒரு பாத்திரத்தில் வாழைப்பழங்களை தலைகீழாக வைக்கவும். வாழைப்பழங்களை இறுக்கமாக அழுத்தி வைப்பதற்குப் பதிலாக, காற்றோட்டமாக வகையில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


(பொறுப்பு துறப்பு : இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் வீட்டுக் குறிப்புகள் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இதற்கு பொறுப்பேற்காது)