உலகின் மிக ஆபத்தான விஷமான பொலோனியம் 210 பற்றி தெரியுமா..!!!
பொலோனியம் 210 என்பது ஒரு கதிரியக்க பொருள் ஆகும், இதன் மூலம் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இது மனித உடலின் உள் உறுப்புகளையும் டி.என்.ஏ மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் விரைவாக அழிக்கக்கூடும்.
மிகவும் ஆபத்தான விஷமாகக் கருதப்படும் சயனைடு பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்க கூடும். இதேபோல், பொலோனியம் 210 (Polonium-210) எனப்படும் மற்றொரு ஆபத்தான விஷமும் உள்ளது. உலகின் மிக ஆபத்தான விஷம்... ஒரு கிராம் இருந்தால் போதும்.. ஆயிரக்கணக்கானவர்களை நிரந்திரமாக தூங்க வைத்து விடும் ஆபத்து நிறைந்தது. இதன் காரணமாக, இதை உலகின் மிக ஆபத்தான விஷம் என்று கூறுவது தவறல்ல. எனவே பொலோனியம் 210 என்றால் என்ன, அதை கண்டுபிடித்தவர் யார் என்பதை பார்க்கலாம்
பொலோனியம் 210 என்பது ஒரு கதிரியக்க பொருள் ஆகும், இதன் மூலம் கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இது மனித உடலின் உள் உறுப்புகளையும் டி.என்.ஏ மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் விரைவாக அழிக்கக்கூடும். இறந்த உடலில் அதன் இருப்பைக் கண்டுபிடிப்பதும் மிகவும் கடினமான பணியாகும். இந்த விஷம் செலுத்தப்பட்டதா என்பதை விசாரணை செய்து அறிவது இந்தியாவில் (India) சாத்தியமில்லை.
பொலோனியம் -210 1898 இல் பிரபல இயற்பியலாளரும் வேதியியலாளருமான மேரி கியூரியால் கண்டுபிடிக்கப்பட்டது. வேதியியல் துறையில் தூய ரேடியத்தை தனிமைப்படுத்தியதற்காக வேதியியலுக்கான நோபல் பரிசையும் பெற்றார். கூடுதலாக, கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசையும் பெற்றார். பொலோனியம் முதலில் ரேடியம் எஃப் என்று பெயரிடப்பட்டாலும், பின்னர் அந்த பெயர் மாற்றப்பட்டது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, போலோனியம் -210 என்ற இந்த கொடிய விஷத்தின் சிறிய துகள் கூட மனித உடலில் நுழைந்தால் ஒரு நொடியில் கொல்லப்படலாம். அதை அடையாளம் காண்பது மிகவும் கடினம். ஏனென்றால் இது உணவில் கலந்தால், அதன் சுவை எதுவும் தெரியவில்லை.
பொலோனியம் விஷத்தின் முதல் பலியான யூரின் ஜூலியட் கியூரி, அதன் ஆய்வாளர் மேரி கியூரியின் மகள், அதில் ஒரு சிறிய துகள் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் உடனடியாக இறந்தார். மேலும், இஸ்ரேலின் (Israel) மிகப்பெரிய எதிரி என்று நம்பப்படும் பாலஸ்தீனிய தலைவர் யாசிர் அராபத்தும் இந்த விஷத்தால் கொல்லப்பட்டார். அதை விசாரிப்பதற்காக அவரது அடக்கம் செய்யப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடல் வெளியே எடுக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் விஞ்ஞானிகள் அவரது உடலின் எச்சங்களில் கதிரியக்க பொலோனியம் -210 கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர்.
ALSO READ | 160 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய AC டபுள் டக்கர் ரயில் சேவை விரைவில்...!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR