குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் பெற சுலப வழிமுறைகள்
வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் அவசியம், மைனர் குழந்தைகளுக்கு எப்படி பாஸ்போர்ட் எடுப்பது? இதோ சுலப வழிகள்
புதுடெல்லி: பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், மைனர் பாஸ்போர்டுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிவதில்லை.வெளிநாடு செல்பவர்கள், தங்கள் குழந்தைகளின் பாஸ்போர்ட்டை எப்படி பெறுவது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்
நீங்கள் வெளிநாடு செல்ல தயாராகி இருந்தால், உங்கள் குழந்தைகளிடம் பாஸ்போர்ட் இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். குழந்தைக்கு பாஸ்போர்ட் சுலபமானது.
இ-பாஸ்போர்ட்
வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் என்பது அவசியமான ஆவணம். பொதுவாக பெரியவர்களிடம் பாஸ்போர்ட் இருந்தாலும், குழந்தைகளுக்கு தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவார்கள். ஆனால் குழந்தைகளின் பாஸ்போர்ட் குழந்தைகளிடம் இல்லாததால் பிரச்சனை எழும். எனவே வாழ்க்கைத் திட்டங்களை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விபரங்களை சேர்ப்பது எப்படி..!!
இந்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, 18 வயதுக்குட்பட்டவர்களும் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையின் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
மைனர் பாஸ்போர்ட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளை விண்ணப்பிப்பதற்கு குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதி இருக்க வேண்டும். பெற்றோரின் பாஸ்போர்ட்டில் அவர்களின் பெயர் இருப்பதும் அவசியம். இதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, முகவரி ஆதாரம் மற்றும் பிறந்த தேதிக்கான சான்று இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
முதலில் பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில், புதிய பயனர் பதிவு மற்றும் ஏற்கனவே உள்ள பயனர் உள்நுழைவு என்ற தெரிவு இருக்கும்.
நீங்கள் ஏற்கனவே இந்த போர்ட்டலில் பதிவு செய்திருந்தால், ஏற்கனவே உள்ள பயனர் உள்நுழைவு விருப்பத்திற்குச் சென்று ஐடி, கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
இல்லையெனில், புதிய பயனர் பதிவு என்ற விருப்பத்தை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
பின்னர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, நீங்கள் யாருடைய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பது தொடர்பான அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.
அதன் பிறகு பணம் செலுத்திய பிறகு படிவத்தை சமர்ப்பிக்கவும்.
மைனர் பாஸ்போர்ட் 5 ஆண்டுகள் அல்லது நபருக்கு 18 வயது வரை செல்லுபடியாகும். உங்கள் குழந்தையின் பாஸ்போர்ட்டுக்கு வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR