வங்கிக்கு சென்று பணம் எடுப்பதெல்லாம் இப்போது அரிதாக மாறி, ஏடிஎம் மெஷின்களிலேயே பணம் எடுத்துக் கொள்கின்றனர் மக்கள். அதுவும் பணம் கைக்கு தேவைப்பட்டால் மட்டுமே ஏடிஎம் மெஷினுக்கு செல்கிறார்கள். இல்லையென்றால், கூகுள்பே, பேடிஎம் போன்ற யுபிஐ வழியாகவே பணப்பரிவர்த்தனையை முடித்துக் கொள்கின்றனர். இந்நிலையில், ஏடிஎம்மில் பணம் கிழிந்த நோட்டுகளாக பணம் வந்தால் என்ன செய்வதென்று சிலர் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது முக்கியமான விஷயமும்கூட. ஒருவேளை உங்களுக்கே கூட ஏடிஎம்மில் கிழிந்த நோட்டுகள் பணமாக வரலாம். அப்படி இருக்கும்போது என்ன செய்வது என நீங்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டால் உங்கள் பணம் மதிப்பிழந்து போகாமல் இருக்கும்.  


மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ 


ஏடிஎம்மில் கிழிந்த நோட்டு


உங்களுக்கு ஏடிஎம்மில் இருந்து கிழிந்த நோட்டு பணமாக வரும்பட்சத்தில், நீங்கள் ஏடிஎம்மில் இருநு பணம் எடுத்த தேதி, ஏடிஎம் இருக்கும் இடம் ஆகியவற்றை கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். கூடவே, பணம் எடுத்தபோது ஏடிஎம்மில் இருந்து பெறப்பட்ட ஸ்டேட்மென்டை வைத்திருந்தால் இன்னும் சிறப்பு. ஏனென்றால், கிழிந்த நோட்டை வங்கியில் மாற்றுவதற்கு நீங்கள் இந்த விவரங்களை எல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஒருவேளை உங்களிடம் பணம் எடுத்த ரசீது இல்லை என்றால், பணம் எடுத்தபோதும் மொபைலுக்கு வந்த மெசேஜை காட்ட வேண்டும். 


ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?


ஏடிஎம்களில் இருந்து பெற்ற கிழிந்த நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகளை ஆர்பிஐ வகுத்துள்ளது. அதன்படி, ஏடிஎம்மில் இருந்து கிழிந்த நோட்டுகள் வந்தால், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைக்குச் சென்று நோட்டை மாற்றிக்கொள்ளலாம். ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் இருந்து பெறப்படும் சிதைந்த நோட்டுகளை மாற்றித் தருவதற்கு எந்த வங்கியும் மறுப்பு சொல்லாது. வங்கி ஊழியர்கள் நோட்டுகளை மாற்ற மறுத்தால், புகார் அளிக்கலாம். 


மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ