நீங்கள் வாங்கும் மஞ்சள் கலப்படமா இல்லையா என்பதை சோதிப்பது எப்படி..!!
நீங்கள் வாங்கும் மஞ்சள் கலப்படமா இல்லையா என்பதை ஒரு எளிய சோதனை மூலம் கண்டறிந்து விடலாம்.
மஞ்சள் என்பது நாம் அண்றாடம் பயன்படுத்தும் பொருளாக உள்ளதோடு, பல மருத்துவ குணங்களும் நிறைந்தது. இந்திய உணவில் இது தவிர்க்க முடியாத ஒன்று. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்து உள்ளன. இருப்பினும், தற்போது, தூய்மையான கலப்படம் இல்லாத உணவு பொருட்களை அடையாளம் காண்பது கடினம். பார்வையை ஈர்க்கும் வகையில் வண்ணம் இருப்பதற்காகவும், சுவை மற்றும் மணத்திற்காவும், அதில பல விதமான கலப்படங்கள் செய்யப்படுகின்றன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பதோடு, தீவிர நோய்களுக்கும் வழிவகுக்கும்.
நியூஸ் மெடிக்கல் என்னும் பத்திரிக்கை வங்கதேசத்தில் மஞ்சள் பயிர்களை வளர்ப்பதை காட்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் காட்டப்பட்ட மஞ்சளில் இயல்பை விட 500 மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்ட கன உலோகங்கள் இருந்தன. மஞ்சள் உற்பத்தி செய்யும் 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்களில் காணப்பட்ட மஞ்சள் கலப்பட மஞ்சளாக இருந்தது. அந்த மஞ்சள் பார்ப்பதற்கு பளீர் மஞ்சள் நிறத்தில் இருந்ததோடு, அதில் 'குரோமேட்' (chromate) எனப்படும் நச்சுக் கூறுகள் அதிகம் இருந்தன.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI - Food Safety & Standards Authority of India) ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. கலப்பட மஞ்சளுக்கும் அசல் மஞ்சளுக்கும் இடையிலான வேறுபாட்டை எவ்வாறு தீர்மானிப்பது என்பதை அந்த வீடியோ காட்டுகிறது. நீங்கள் வாங்கும் மஞ்சள் கலப்படமா இல்லையா என்பதை ஒரு எளிய சோதனை மூலம் கண்டறிந்து விடலாம்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!
வீடியோவில் காட்டப்பட்டுள்ள வழிமுறைகள்:
- இரண்டு கிளாஸ் தண்ணீரை எடுத்து அவற்றில் சிறிதளவு மஞ்சள் சேர்க்கவும்.
- கலப்படமில்லாத மஞ்சள் கலந்தால், அந்த கரைசல் வெளிர் மஞ்சள் நிறமாக மாறும், மஞ்சள் கீழே பாடிவதையும் நீங்கள் அதில் நீங்கள் காணலாம்.
- மறுபுறம், கலப்பட மஞ்சளை கலக்கும் போது, அந்த கரைசலின் நிறம் மிகவும் அடர்த்தியான, பிரகாசமான மஞ்சள் நிறமாக மாறும்.
ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR