கொரோனாவுடன் வாழ கற்று கொடுக்கும் சில நேர்மறை சிந்தனைகள்..!!!
பயத்தில் பலர் இன்டர்நெட்டில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் கிடைப்பது எல்லாம் ஆதாரமானதல்ல. அதிகாரப்பூர்வ இணையதளங்களை விட்டு விட்டு புரளி கிளப்பும் வெப்சைட்களை பார்த்தால் பயம்தான் அதிகரிக்கும்.
கொரோனா தொற்று ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது என்றாலும், இயல்பு வாழ்க்கை கிட்டத் தட்ட திரும்பி விட்டது எனலாம்.
கொரோனா பரவல் அதிகரித்தாலும், இப்போது அதனுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் இல்லை.
கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, மருத்துவர்கள் அரசு கூறும் அறிவுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் நமது மனம் தான் காரணம். முன்னெச்சரிக்கையாக இருப்பதில் தப்பு ஏதும் இல்லை. ஆனால், வரம்பை மீறி போய் விடக்கூடாது. கதவை பூட்டிவிட்டு திரும்ப திரும்ப இழுத்துப் பார்த்தது போல் இருக்கக் கூடாது. அதனால், எந்த விதமான முன்னெச்சரிக்கையை பின்பற்ற வேண்டும் என தெரிந்து கொண்டு கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதுவே நம்பிக்கை தரும். தேவையற்ற பதற்றம் மனதை தளரச்செய்து விடும்.
வீட்டில் மற்றவர்களோடு அரவணைப்போடு பழகுங்கள். சமவயது உள்ளவர்களுடன் அரட்டை ஒருபுறம் இருந்தாலும், வயதானவர்களை புறக்கணித்து விடாதீர்கள். தனிமை அவர்களை வாட்ட அனுமதிக்கவே கூடாது. அவர்களுடனும் போதுமான நேரத்தை செலவிடுங்கள்.
நம்பிக்கை உங்களுக்குள் இருந்தால் மட்டும் போதாது. அதை மற்றவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்களுடன் இருப்பவர் குழப்பத்தில் இருந்தால் தெளிவுபடுத்துங்கள். கொரோனா பயத்தை போக்குங்கள். நம்பிக்கையூட்டுங்கள். உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருங்கள்.
பயத்தில் பலர் இன்டர்நெட்டில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் கிடைப்பது எல்லாம் ஆதாரமானதல்ல. அதிகாரப்பூர்வ இணையதளங்களை விட்டு விட்டு புரளி கிளப்பும் வெப்சைட்களை பார்த்தால் பயம்தான் அதிகரிக்கும்.
எது சரி என தெரிந்து கொண்டு அதை கடைப்பிடியுங்கள். உங்களுக்கு உறுதியாக தெரிந்த வழிமுறைகளை குடும்பத்தினர், நண்பர்களுக்கு சொல்லுங்கள். நீங்களே ரோல் மாடலாக இருந்து வழிநடத்துங்கள். நம்பிக்கையும், தெம்பும் தானாக வரும்.
ALSO READ | பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை.. மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR