Bank Holidays May 2022: மே மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை
வங்கி விடுமுறைகளின் விபரங்களை அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் வங்கி பணிகளை எளிதாக திட்டமிட முடியும் என்பதோடு, பல வகையான பிரச்சனையையும் தவிர்க்கலாம்.
மே 2022 மாதத்தில் வங்கி விடுமுறைகள்: வங்கி விடுமுறைகளின் விபரங்களை அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் வங்கி பணிகளை எளிதாக திட்டமிட முடியும் என்பதோடு, பல வகையான பிரச்சனையையும் தவிர்க்கலாம்.
ஏப்ரல் மாதம் முடிவடைந்து, மே மாதம் தொடங்க உள்ள நிலையில், வரும் மே 2022க்கான விடுமுறைப் பட்டியலை (மே 2022 இல் வங்கி விடுமுறைகள்) ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.
முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்
மே மாத தொடக்கத்தில், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். மாநில மற்றும் உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்களில் வெவ்வேறு நாட்கள் இருக்கும். வங்கி விடுமுறைகளை ரிசர்வ் வங்கி நான்கு அடிப்படையில் தீர்மானிக்கிறது. தேசிய் அளவில் மற்றும் மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தவிர, தேசிய விடுமுறைகள் மற்றும் சனி-ஞாயிறு விடுமுறைகளும் காலண்டரில் உள்ளன.
மேலும் படிக்க | மூன்றாவது நாளாக தங்கத்தின் விலையில் சரிவு: இல்லத்தரசிகள் படு ஹேப்பி
மே மாதத்தில், மொத்தம் உள்ள 31 பல்வேறு மண்டலங்களில் நாட்களில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இந்த விடுமுறை நாட்களில், வங்கியின் பணிகள் ஆன்லைன் பயன்முறையில் தொடரும் என்பது அனைவரும் அறிந்ததே. விடுமுறை நாட்களைப் பொறுத்தவரை, வங்கிகள் ஏற்கனவே வாடிக்கையாளர்களை அந்தந்த மாதத்தில் விடுமுறை நாட்களை முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றன. உங்கள் நகரம் அல்லது மாநிலத்தில் எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதன் மூலம் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.
மே மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் (மே 2022 இல் வங்கி விடுமுறை நாட்கள்)
2022, மே 1: தொழிலாளர் தினம் / மகாராஷ்டிரா தினம். (ஞாயிற்றுக்கிழமை)நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
2022, மே 2: மகரிஷி பரசுராமர் ஜெயந்தி - பல மாநிலங்களில் விடுமுறை
2022, மே 3: ஈத்-உல்-பித்ர், பசவ ஜெயந்தி (கர்நாடகா)
2022, மே 4: ஈத்-உல்-பித்ர்
2022, மே 9: குரு ரவீந்திரநாத் ஜெயந்தி - மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா
2022, மே 14: இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை
2022, மே 16: புத்த பூர்ணிமா
2022, மே 24: காசி நஸ்ருல் இஸ்மாலின் பிறந்தநாள் - சிக்கிம்
2022, மே 28: 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை
மே 2022 இல் வார இறுதி வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
1 மே 2022 : ஞாயிறு
8 மே 2022 : ஞாயிறு
15 மே 2022 : ஞாயிறு
22 மே 2022 : ஞாயிறு
29 மே 2022 : ஞாயிறு
மேலும் படிக்க | SBI Recruitment 2022: பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?
மேலும் படிக்க | Akshaya Tritiyai 2022: இந்த நன்நாளில் இதை செய்தால் பன்மடங்கு நன்மை உண்டாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR