Grey Hair: நரை முடிக்கு நிரந்திர தீர்வு தரும் ‘3’ வீட்டு வைத்தியங்கள்!
வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு பெறவும், முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்துகொள்ளவும் ஆன மிக எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளலாம்.
Grey Hair problem: ஒரு காலத்தில் முடி நரைப்பது வயதானவர்களின் பிரச்சனையாக இருந்தது. ஆனால் தற்போது இது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. இப்போது தலைமுடி சிறு வயதிலேயே நரைக்க தொடங்கி விட்டதை காண்கிறோம். குழந்தைகளின் தலைமுடி கூட இளம் வயதிலேயே நரைப்பது மிகவும் அதிர்ச்சியாகத் தான் உள்ளது. இது நமது தற்போதைய வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் தான் காரணம் என்றால், மிகையில்லை.
முடி நரைப்பது நமது தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சரியான நேரத்தில், அந்த பிரச்சனை மீது கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். மேலும் இந்த பிரச்சனை வேரிலிருந்து அகற்றப்பட வேண்டும். இதற்கு சில நிரந்திர தீர்வுகள் உங்களுக்கு உதவும்.
சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன
வாழ்க்கையில் அதிக மன அழுத்தம் காரணமாக, ஆரோக்கியத்துடன் தலைமுடியும் பாதிக்கப்படுகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன், நீங்கள் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டு, உங்கள் தலைமுடியை மீண்டும் இயற்கையாக கருமையாக்கலாம்.
ALSO READ | Rose Water: பலவித சரும பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் பன்னீர்..!!
நரை முடி பிரச்சனைக்கான காரணங்கள்
1. மோசமான வாழ்க்கை முறை
2. ஹார்மோன் மாற்றங்கள்
3. பாதிப்பை ஏற்படுத்து முடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்
4. மெலனின் நிறமி குறைதல்
மெலனின் நிறமி நமது தலைமுடியின் வேர்களின் செல்களில் காணப்படுகிறது மற்றும் இது நம் முடியை கருப்பாக்குகிறது. மெலனின் உற்பத்தி குறையும் போது, முடி நரைக்க ஆரம்பிக்கும்.
முடியை கருமையாக்க இயற்கை வழிகள்
1. டீ
தேயிலை, அதாவது டீ இலைகள் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது ஏராளமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் முடி ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பொருள் எனலாம்
நீங்கள் முதலில் தேயிலை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். தண்ணீர் ஆறியதும் முடியின் வேர்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து சாதாரண நீரில் முடியை அலசவும். இதற்குப் பிறகு, அடுத்த நாளில் உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்ய வேண்டும்.
ALSO READ | Skin Care for Men: ஆண்கள், அழகனாக மாடல் போல் தோற்றமளிக்க சில டிப்ஸ்..!!
2. வெந்தயம்
நெல்லிக்காயைத் தவிர, வெந்தயம் இயற்கையாகவே முடியை கருமையாக்கும். வெந்தயத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் முடியை கருப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இதைப் பயன்படுத்த, இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அதை அரைத்து முடியின் வேர்களில் தடவவும். நீங்கள் விரும்பினால், தேங்காய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்து முடிக்கு ஹேர் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
3. நெல்லிக்காய்
நெல்லிக்காய் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நெல்லிக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. அவை முடியின் வலிமைக்கும், கருமையைப் பராமரிப்பதற்கும் மற்றும் முடி உதிர்தலை தடுப்பதற்கும் அவசியமானதாகும்.
ஆம்லா என்னும் நெல்லிக்காயை மருதாணியுடன் பயன்படுத்தலாம். நீங்கள் முடியின் வேர்களில் நெல்லிக்காய் சாற்றை தடவலாம். அதன் பொடியை பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம்.
ALSO READ | Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR