Rose Water: பலவித சரும பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் பன்னீர்..!!

பழங்காலத்தில், ராணிகள்  தங்கள் பணிப்பெண்களை வைத்து, தூய ரோஸ் வாட்டர் தயாரித்தனர். ரோஸ் வாட்டர் அழகு சாதனை பொருளாக மட்டுமல்லாமல் பல வித சரும நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 16, 2021, 12:41 PM IST
  • சுருக்கங்கள் மற்றும் முகப்பருவைப் போக்கும் ரோஸ் வாட்டர்.
  • பன்னீர் ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
  • ரோஸ் வாட்டர் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது.
Rose Water: பலவித சரும பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் பன்னீர்..!! title=

Rose Water: தற்போது ரோஸ் வாட்டர் எந்த சந்தையிலும் கிடைக்கிறது. ஆனால், முன்பு இப்படி எளிதாகக் கிடைக்காது. ராணிகள் தங்கள் பணிப்பெண்கள் மூலம் சுத்தமான பன்னீரைத் தயாரித்து பின்னர் அதைப் பயன்படுத்தினர். ரோஸ் வாட்டர் சரும பராமரிப்பிற்கு இன்றியமையாதது என்பதோடு பல உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் சிறப்புப் பலன்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

1. தலைவலிக்கு சிகிச்சை

மன அழுத்தம் அல்லது சோர்வு காரணமாக தலைவலி பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டால், பன்னீர் இதற்கு பெரிதும் உதவும். இதற்கு ரோஸ் வாட்டரில் கைக்குட்டையை நனைத்து சிறிது நேரம் தலையில் வைத்தால் போதும். இதனால் தலைவலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

2. சரும சுருக்கங்களுக்கு சிகிச்சை 

வயதாக ஆக, முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை காரணமாகவும், மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தாலும் இந்த பிரச்சனையை சிறு வயதிலேயே சந்திக்க நேரிடுகிறது. சுருக்கங்கள் மற்றும் முகப்பருவைப் போக்க ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவி வந்தால், சிறந்த பலன்களை பெறலாம்.

ALSO READ | Skin Care for Men: ஆண்கள், அழகனாக மாடல் போல் தோற்றமளிக்க சில டிப்ஸ்..!!

3. கண்களை சுத்தம் செய்யும் மருந்து
கண்களைச் சுத்தப்படுத்தவும், அழுக்கு மற்றும் தூசிகளை அகற்றவும் ரோஸ் வாட்டர் என்னும்ம்பநீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது கண்களில் எற்படும் தொற்று அபாயத்தை நீக்குகிறது. இதற்கு, ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு சொட்டு பன்னீர் விட வேண்டும்.

4. எக்ஸிமா

தோலில் அரிப்பு, தோல் சிவத்தல் போன்றவை என்பது தோல் தொற்று காரணமாக ஏற்படுவது ஆகும். இந்த உடல் பிரச்சனைகளுக்கு ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இதற்கு ரோஸ் வாட்டரை மருந்துடன் சேர்த்து அரிப்பு உள்ள பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவவும். தோலில் ஏற்படும் நோய்த் தொற்றுகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5. தொண்டை புண் சிகிச்சை

ரோஸ் வாட்டர் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, தொண்டை புண்களுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. இருப்பினும், இதை உறுதி படுத்தும் உறுதியான அறிவியல் சான்றுகளைப் பெற ஆராய்ச்சி தேவை. ஆனால், தூய ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீரை உட்கொள்வதால், தீங்கு விளைவிக்கும் ஆபத்து மிகக் குறைவு. எனினும், இதனை உபயோகிக்கும் முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

( பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. கல்வி கற்பதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)

ALSO READ | Benefits of banana: வாழைப்பழம் சாப்பிட ஏற்ற நேரம் எது..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News