வரிச் சலுகையுடன் நல்ல வருமானம் தரும் FD... 8.1% வட்டியுடன் வரி சேமிப்பு!
வரி சேமிப்பை கொடுக்கும் FD முதலீடு மூலம் வருமான வரித்துறையின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கோரலாம். இந்த விருப்பம் வரி சேமிப்பு மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி முதலீடு மற்றும் பிற விருப்பங்களை விட பாதுகாப்பானது.
மூத்த குடிமக்களுக்கு வரி சேமிக்க, நிலையான வைப்பு (FD ) ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாக மாறியுள்ளது. இதில், முதலீட்டாளர்களுக்கு வரிச் சேமிப்பு கிடைப்பதோடு மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கும் நல்ல வட்டி கிடைத்து வருகிறது. வரி சேமிப்பை கொடுக்கும் FD முதலீடு மூலம் நீங்கள் வருமான வரித்துறையின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு கோரலாம். இந்த விருப்பம் வரி சேமிப்பு மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி முதலீடு மற்றும் பிற விருப்பங்களை விட பாதுகாப்பானது. ஆபத்து இல்லாமல் வரி சேமிப்பு முதலீட்டு வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த நிலையான வைப்பு திட்ட முதலீடு உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். உங்களுக்கு 8.1 சதவிகிதம் வரை வட்டி அளிக்கும் அத்தகைய முதலீட்டு விருப்பம் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.
வரி சேமிப்பை கொடுக்கும் FD முதலீடுகளின் அதிக வட்டி தரும் சில வங்கிகள்:
DCB வங்கி வரி சேமிப்புக்கான FD மீது 8.1% வட்டி தருகிறது.
ஆக்சிஸ் வங்கியின் வருமான வரி சேமிப்புக்கான FD மீது 7.75% வட்டி தருகிறது.
IndusInd வங்கி வரி சேமிப்புக்கான FDக்கு 7.75% வட்டி தருகிறது.
யெஸ் வங்கி லிமிடெட் வரி சேமிப்புக்கான FDக்கு 7.75% வட்டி தருகிறது.
HDFC வங்கி வரி சேமிப்புக்கான FDக்கு 7.5% வட்டி தருகிறது
ICICI வங்கியின் வரி சேமிப்பு FDக்கு 7.5% வட்டி தருகிறது.
IDFC ஃபர்ஸ்ட் பேங்க் 7.5 சதவிகிதம் வட்டி தருகிறது
பாங்க் ஆஃப் பரோடா வரி சேமிப்பு FDக்கு 7.15% வட்டி தருகிறது
SBI வங்கி 7.5% வட்டியும், PNB வங்கி 7% வட்டியும் தருகின்றன.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் இனி இல்லை! கை கொடுக்கும் NPS திட்டம்!
வரி விலக்கு
நீங்கள் வரி சேமிப்பு FD இல் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பெறலாம். இதன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இருப்பினும், இந்த விலக்கு உங்களுக்கு 5 ஆண்டுகள் முதிர்வு கொண்ட FDகளில் மட்டுமே வழங்கப்படும். மறுபுறம், மூத்த குடிமக்கள் ஒரு நிதியாண்டில் வருமான வரியின் 80TTB பிரிவின் கீழ் வட்டியில் ரூ. 50,000 வரை தள்ளுபடி கோரலாம். 2023 நிதியாண்டிற்கான வரியைச் சேமிப்பதற்கான கடைசி வாய்ப்பு மார்ச் 31, 2023. இந்த நிதியாண்டில் நீங்கள் வரியைச் சேமிக்க விரும்பினால், இப்போது அதில் முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க | முக்கிய அறிவிப்பு! இனி இந்த தொகைக்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்ய முடியாது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ