நோட்டுகளை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் போதிலும் கள்ள நோட்டு கும்பல் புதிய ரூபாய் நோட்டுக்களை போன்ற கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பணப்பரிவர்த்தனை என்பது வெகுவாக குறைந்துவிட்ட போதிலும், சிலர் பழைய பழக்கத்தை விட முடியாமல், பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். அதேபோன்று, சிறு வியாபாரிகள் அல்லது வேறு சிலர், யு பி ஐ வசதி இல்லாத காரணத்தினால், பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதையே விரும்புகின்றனர். இந்நிலையில், நம்மிடம் இருக்கும் ரொக்க பணம், குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள், உண்மையானது தானா, கள்ள நோட்டு இல்லையே என்பதை அறிந்து கொள்ள ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உண்மையான நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகள் இடையே வித்தியாசம் காண்பதில் பலருக்கு சிரமம் உள்ளது. எனவே இது குறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ளலாம்.


இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்


பண பரிவர்த்தனையில், நான்கு போலி நோட்டுகள் அல்லது கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், நோடல் வங்கி அதிகாரி அல்லது காவல்துறையிடம் இது குறித்த புகார் அளித்து அவர்களிடம் நோட்டுக்களை சமர்ப்பிக்க வேண்டும். ஐந்து கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், நோடல் அதிகாரி உடனடியாக உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனுடன், இந்த வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும். இது குறித்த அறிக்கையின் நகலை அதான கிளைகளுக்கு அனுப்ப வேண்டும்.


கள்ள நோட்டுக்களை அடையாளம் காணும் வழிமுறைகள்:


1. நோட்டின் முன் பக்கத்தில், இடது பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை பட்டைக்கு சற்று மேலே இரண்டு வண்ணங்களில் 500 என்று எழுதப்பட்டிருக்கும்.


2. பச்சை நிறப் பட்டையில் 500 என்ற எழுத்துக்கள்  அச்சிடப்பட்ட்டிருக்கும். இது நோட்டை மேல்நோக்கி சாய்க்கும் போது தெரியும்.


3. ரூபாய் 500 என்று தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.


மேலும் படிக்க | உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ₹100 கள்ள நோட்டு இல்லையே... கண்டறிவது எப்படி!


4. நோட்டின் நடுவில் மகாத்மா காந்தியின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.


5. காந்தியின் படத்தில் பாரதம் மற்றும் இந்தியா என்று மைக்ரோ எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும்.


6. ரூபாய் நோட்டுகளில், கலர் ஷிப்ட் விண்டோவுடன் கூடிய செக்யூரிட்டி த்ரெட், நோட்டை சாய்க்கும் போது நூல் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறும்.


7. ரிசர்வ் வங்கியின் லோகோ, ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்குக் கீழே,  மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலதுபுறத்தில் இருக்கும்


8. நோட்டின் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்ட கிரீம் வெள்ளை இடத்தில் காந்திஜியின் உருவப்படம் மற்றும் எலக்ட்ரோடைப் (500) வாட்டர்மார்க் இருக்கும்.


9. ரூபாய் நோட்டின் மேல் இடது மற்றும் கீழ் வலதுபுறத்தில் ஏறுவரிசை அளவில் எழுத்துருவில் எண்கள் கொண்ட எண் பேனல் இருக்கும்.


10. வலதுபுறத்தில் அதே கிரீம்/வெள்ளை இடத்தில் ரூபாய் சின்னத்துடன் நிறம் மாறும் மை (பச்சை முதல் நீலம் வரை) கொண்டு 500 குறிக்கப்பட்டிருக்கும்.


11. நோட்டின் வலது பக்கத்தில் அசோக தூண் பொறிக்கப்பட்டிருக்கும்.


12. மகாத்மா காந்தியின் உருவப்படம், அசோகத் தூண் மற்றும் அதற்கு சற்று மேலே கருப்பு வட்டத்தில் பொறிக்கப்பட்ட 500 எண், தொட்டால் உணரும் வகையில், கண் பார்வை அற்றவர்கள், அதைத் தொட்டு அடையாளம் காணும் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் 2 ஜாக்பாட் செய்திகள் கிடைக்கும், காத்திருக்கும் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ