கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது அறிவியல் பூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் கிடைப்பதற்காக முன்னோர்களால் அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாக பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர்நடுவிலோ, மலையுச்சியிலோ என கோயிலுக்கென்று இடம் அந்தக்காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில் தான்! 


இந்த உயர் காந்த அலைகள் (High Magentic Waves) அடர்ந்திருக்கும்  இடத்தின் மையப்பகுதியில்   கர்ப்பக்கிருகம்  அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள்.


சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே அந்த யந்திரங்கள்.  பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. 


இந்த அறிவியல் அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டு செல்ல செப்புக் கம்பிகளை பயன்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தை பிரதட்சணமாக சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக அதிகரிக்கிறது.


ALSO READ | தானங்களும் அவற்றின் பலன்களும்; நமது சாஸ்திரங்கள் கூறுவது என்ன


இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களை  சென்றடைவதற்காகவே, கர்ப்பகிரகம் மூன்று பக்கமும் ஜன்னல்கள் இல்லாமல் அமைக்கப்படுகிறது.


கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும், பூஜை மந்திரச் ஒலிகளும் சவுண்ட் எனர்ஜியைத் தருகின்றன. 


கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உடலை நோயிலிருந்து காக்கிறது.


பெருமாள் கோயிலில் மஞ்சளும்,குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவகுணமுடைய பொருட்களை உள்ளடக்கியது


பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக்கற்பூரத்தில், காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவும் பென்சாயின் உள்ளது.


ALSO READ | எடுத்த காரியத்தை கைகூட செய்யும் பீஜ அட்சர மந்திரங்கள்

கர்ப்பக்கிருகத்தில் இருந்து வரும் பாஸிடிவ் காந்த அலைகளைப் கிரகித்து கொள்ளத் தான் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். 


பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில்‌ கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில்பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. 


அந்தக்காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்தஅழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சிபெறுகிறது.


ALSO READ | தீராத கடன் தொல்லையா; ஸ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மரை வணங்க கடன் தீரும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR