புரட்டாசி மாதம் ராசி சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது. சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாதத்தில் இறை வழிபாடு, சக்தி வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு என இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம் ஆகும்.. பித்ருக்களை வழிபடும் மகாளயம், சக்தி வடிவாய் பெண்களை வழிபடும் நவராத்திரி பண்டிகையும் புரட்டாசி மாதத்தில் வருவதே. அதேபோல, கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கட ன்கள் செலுத்த சிறந்த மாதம் புரட்டாசியாகும்.


இந்த மாதத்தில் கன்னி மூலையில் அமைந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டு மின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமிக்கும் உகந்தவை. புனிதமான புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணி யம் கிடைக்கும் என்பது இந்து மத நம்பிக்கை.


Also Read | புரட்டாசி பெருமாளின் தரிசன உலா


மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரத ம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை இந்த மாதத்தில் சிறப்பானவை. 


புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.


புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டு க்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.


 புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி வைத்து மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களு ம் வந்து சேரும்.


Also Read | ராசிபலன்: வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம்


அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நவராத்தி ரி பண்டிகை கொண்டாடப்படுவதும் இந்த மாதத்தில்தான் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் விரதம் இருந்து அம்மனை வணங்குவதன் மூலம் அருளோடு பொருளும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


புரட்டாசி மூன்றாம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சதுர்த்தசி திதி, அனந்த விரதம். புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தை பசுஞ்சாண த்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும். 


ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூ லம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்கு ரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.


பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.


Also Read | Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 19 செப்டம்பர் 2021


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR