பக்தர்கள் தங்கம், வெள்ளி நாணயங்களை பிரசாதமாக பெறும் கோவில் எது தெரியுமா..!!!
இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை.
இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. இதுபோன்ற ஒரு தனித்துவமான கோயில் மத்திய பிரதேசத்தின் ரத்லம் நகரத்தின் மானக்கிலும் அமைந்துள்ளது. அனைத்து கோவில்களில், பக்தர்கள் பொதுவாக இனிப்புகள் அல்லது சில உணவுப் பொருட்கள் தான் பிரசாதமாக கிடைக்கும். ஆனால் அன்னை மகாலட்சுமியின் இந்த ஆலயத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், இங்கு பக்தர்கள் பிரசாதமாக, தங்க நகைகள் (Gold Jewelry) , நாணயங்கள் வெள்ளி நாணயங்களை நகைகளைப் பெறுகிறார்கள். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுடன் வீட்டிற்கு செல்கின்றனர்.
அன்னை மகாலட்சுமியின் இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மாதாவின் காலடியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் பணத்தையும் சமர்பிக்க பக்தர்கள் இங்கு வருகிறார்கள். தீபாவளி (Deepawali) பண்டிகையையொட்டி, இந்த கோயிலில் ஐந்து நாட்கள் தீ உற்சவம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கோயில் பூக்களால் அலங்கரிக்கப்படுவதில்லை, மாறாக, பக்தர்கள் வழங்கும் ஆபரணங்கள் மற்றும் ரூபாய்நோட்டுகளால் அலங்கரிக்கப்படுகிறது.
ALSO READ | தீராத பண பிரச்சனையா...கவலை வேண்டாம்.. இந்த நான்கு விஷயங்களை கடைபிடித்தால் போதும் ..!!!
தீப உற்சவத்தின் போது, குபேரின் சன்னிதானத்திற்கு வரும் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக, ஆபரணங்களும் ரூபாயும் வழங்கப்படுகின்றன.
இந்த கோவிலின் கதவுகள் தீபாவளி சமயத்தில் 24 மணிநேரமும் இந்த கோவில் திறந்திருக்கும். தண்டேராக்கள் மூலம், குபேர சன்னிதியில், பெண் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இங்கு வரும் எந்த பக்தர்களும் வெறுங்கையுடன் திரும்புவதில்லை.
கோவிலில் (Temple) நகைகள் மற்றும் பணத்தை பிரசாதமாக வழங்கும் பாரம்பரியம் பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. முன்னதாக இங்குள்ள மன்னர்கள் கோயிலில் அப்பகுதி செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பணம் வழங்குவார்கள், இப்போது பக்தர்களும் நகைகள், பணம் போன்றவற்றை தாயின் காலடியில் இருந்து வழங்குகிறார்கள். இதைச் செய்வதன் மூலம், அன்னை லட்சுமியின் ஆசீர்வாதம் எப்போதும் அவர்களின் வீடுகளில் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR